காமராஜர் 3

கவிஞர்கள் சங்கமம்

காமராஜர்

செல்வாக்கு அதிகம்
கொண்டவர்
அதனால் வாக்கு
அதிகம் வென்று
சட்டமன்றம் சென்றவர்

காமராசன்
காமம் துளியும்
இல்லை
ஆனால்
தமிழ்நாட்டின்
ராசனாய் இருந்தவர்

பெண்ணை மணக்காது
நாட்டிற்காக
இம் மண்ணை மணந்தவர்

இவர்
விருதுநகர்
பெற்ற விருது

பல்லிகள் மட்டும்
ஓடிக்கொண்டிருந்த
பள்ளிகளில்
பிள்ளைகளை
ஓடவைத்தவர்

இவர்
பேனாவில்
ஊற்றிய மை நேர்மை

இவர்
ஏழைப் பிள்ளைகளுக்கு
புதிய கனவை மட்டும்
அளிக்கவில்லை
மதிய உணவையும்
அளித்தவர்

இந்த
நாடாண்ட
நல்லவரைக்கூட
சிலர் நாடாராகவே பார்த்தனர்

இவர்
ஆ ச்சீ
என்று ஆட்சி நடத்தாமல்
சிறப்பான
ஆட்சி நடத்தியவர்

வெள்ளாடை
அணிந்தவர்
மக்களை
வெள்ளாடாய்
நினையாதவர்

மர்ம வீரர்கள்
நிறைந்துவிட்ட
அரசியலில்
இவர்
தர்ம வீரனாய்
கர்ம வீரனாய்
இருந்தவர்

கவிஞர் புதுவைக் குமார்

எழுதியவர் : புதுவைக் குமார் (20-May-19, 5:21 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 62

மேலே