எங்கனம் அறியேன்
மனம் நாடும் மணவாளனே...!
கண் இமைக்குள் கனவானவனே...!
உன் காந்தப்பார்வையில்
இப்பாவையும் மயங்கியதை நீ அறியாயோ...?
செவ்விதழோரம் நாணம் சிவந்திடவே....
இப்பேதையும் உணர்தேன்.... காதல் என்றே...!
உந்தன் விழிகளுக்குள் சிறைகொள்ள
கங்கணம் கட்டிய என் நிமிடங்கள்
மறைமுகமாகவும் கூறவில்லையே.......
எங்கனம் அறியேன்....?
இக்கனம் அனைத்தும் கனவாய் போக.........