உன் காதலின் பித்தன்

தலை குனிந்து போகுதடி
கரிசல் காட்டு தாழம் பூவும்!!!
மர்மம் கொஞ்சம் சேர்க்குதடி
மங்கை உந்தன் மாய விழியும்!!!
விதுலம் பூவும் சற்று
விரிந்துதான் உனை பார்க்குதடி!!
விளம்பரம் இல்லா உந்தன்
கொள்ளை அழகை காண!!!
உதிர்ந்து விட்டு போனாய்
உன் கூந்தல் சன்பக மலர்களை!!!
சத்தம் இல்லமால்
சேகரித்து வைத்து கொண்டு இருக்கிறேன்!!!
என் காதலின் சின்னமாக!!!
சில்வண்டுபோல் சுற்றி திரிந்த இக் கரு வண்டு பயலின் கர்வத்தை அடக்கி!!
இப்படி கவிதை எழுத வைத்துவிட்டாயே!!!
கம்பனை எதிர்க்கவும்
மனம் விம்முகிரதடி!!!
உனை வர்ணிக்கும் மாத்திரத்தில்!!!
பூ போலான இப் புவியின் அரசியே!!!
பிரம்மன் படைப்பில்
அறியதோர் சாதனைதான் நீ!!!
அகவைகள் அதிகமாய் ஆனாலும்
அழகு சிற்பம் தான் நீ!!!
என்றும்
உன் காதலின் பித்தன் தான் நான்!!!
@@@ ரூபன் புவியன் @@@

எழுதியவர் : ரூபன் புவியன் (20-May-19, 6:55 pm)
சேர்த்தது : Ruban puviyan
Tanglish : un kathalin pithan
பார்வை : 242

மேலே