கடை தெருவில் கலகலப்பு

பெண்ணே!
நீ கடை தெருவில்
நடை போட்டு வந்தால்
கலகலப்பு ....
பூக்கடையை கடந்தால்
பூக்களின் வாசம்
பூமியெங்கும் வீசும்...
தேனீர் கடையை கடந்தால்
தீ இன்று பொங்க
தவறவில்லை பால் ....
துணிக்கடையை கடக்கையில்
கை கால்கள் முளைத்தது
போல் ஆடைகளெல்லாம்
உன்னை தேடி ஓடி வரும்...
வளையல் கடையை கடக்கையில்
அவள் கையில் இருக்கை
வேண்டும் என்னு ஏக்கத்தில்
கதறும் வளையல்கள்....
செடுப்புக்கடையை கடக்கையில்
அவளின் செருப்பிற்க்கு
இருக்கும் சிறப்பு எனக்கில்லை
என்று கூறும் விலை போகா
காலணிகள்...
இளநீர் கடையை கடக்கையில்
இவள் பன்னீர் போல்
இருக்கிறாளே என்று
வியக்கும் தலை வேட்டி
கிடக்கும் இளநீர் குடுவைகள்..
நீ கடை தெருவில்
நடை போட்டு வந்தால்
கலகலப்பு தான்...நீ
எந்தவித சலசலப்பும் இன்றி
வந்தாலும் கூட....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jun-19, 1:26 pm)
பார்வை : 91

மேலே