அன்பிற்க்கு தட்டுப்பாடு
இரண்டு ரூபாய்
இங்கிலன்டு கவர் வாங்கி
இரண்டு மாத சேமிப்பு
நினைவுகளை நெருக்கமான
மிக நெருக்கமான வரிகளில்
இறுக்கமாக எழுதி
தபால் வழி தகவல்
அனுப்புவோம்.....
கடிதம் சென்று சேர்ந்தது
என்ற செய்தி
பதில் கடிதம் வந்தால்
மட்டுமே சாத்தியப்படும்....
இன்று 300 ரூபாயில்
இரண்டு மாதத்திற்க்கு
ரீஜார்ச் ....நிற்ப்பதற்க்கு
நேரமில்லை என்பதைப் போல
எல்லோருக்கும் சொல்லிவிடுகிறோம் "ஹாய்"...
காலை வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
இரவு வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
ஆனாலும் அன்பிற்க்கு
மட்டும் ஏற்பட்டது
தட்டுப்பாடு...!