அனுராகவிலோச்சனதாரி

அனுராகவிலோச்சனதாரி
===========================
பக்கம் வா என்றுவிட்டு,
இதழ்கள் ஒவ்வொன்றாய்ப் பீய்த்துக்கொன்று வருடி
உயிர்க்கதைக் கொல்லுகிறாய் ..
ஒளிப்பூட்டல் விடுகதைச் சிரிப்பு,
வீட்டுச்சாலை பாததனம்,
ஒளி எழுதிய கனவுக்கண் அனுகவிதை,
வாழ்க்கை இழுக்கும் கால அச்சாணி,
காணாமைத் தளர்வு,
தனிக்காற்றுக்கால சருகுசாதன சாந்திரிகைப் பொலிவு,
//""உன் வெட்கத்தை எல்லாம்
உனக்கேத் தெரியாமல்,
நிறையமுறை என் கவிதைகளில் சேர்த்துவிட்டேன்
ஆதலால்,
அது இப்போது வேண்டாம் ம்
முதல் மோதிரம் விரல் தொடும்போது
முகம் திருப்பிக் கொண்டாய்,
இரவு உடைந்த காதணிப் புலம்பல்கள்
கால்குத்திக் குரலால் அனுமோதனம் செய்தன. ,
கரவு இழந்த பாலையில்
ஒருநின்ற பூமரம்போல
மெலிர்ந்த உன் கொடி உடலில்
சேலை உலர்த்தினேன்,
காத்திருக்கும் முத்தமுறை எல்லாம்
பித்தம் சாயவா ம்,
விரல் புள்ளித் தொடக்கம்
வளைகோடுகளில் மறைந்துபோயிருக்கலாம் தான் ,
என்ன செய்வது,
பிணக்கக்கோலம் முடிவுற்ற
இடம் தெரியவில்லை சென்றுவிட்டேன் ..
இனி எப்போதோ,
நிகழவிருக்கும் சந்திப்பிற்கென,,
பின்னிரவுகளில்,,
கோபங்களின் காலாவதியில்
மாவிலைக் கோர்த்துக்கொண்டிருப்பாய் தானே ம் ..
எப்படியாவது வந்துவிடுகிறேன்..""//
எப்போவாவது,
நாம ஹனிமூன் போன நாட்களைப்பற்றி
நினைச்சுப் பாத்துக்குவேன்
ஊதாநிறத்தில்
பறவைகளே இல்லாத
பின்னிருண்ட வானம்,
அந்தி உறங்கிய மரக்கூடு,
ஏதும் கேட்காமலேயே
வழித்துணைக்கு வந்த ஸ்கூல் குழந்தைகள்,
உன்னைப் பித்துப்பிடிக்க செஞ்ச
பூஞ்சைக்காளான்கள்,
சேன்-ரிமோ கெஸ்ட் ஹவுஸின் கஃபுசினோ,
சாங்ரில்லா வினுடைய
காகிதப்பூக்களினால் கத்தரித்த காம்பவுண்ட் சுவர்,
பனிப்புகாரினூடே ஆன
காலைநேர ஜாகிங்,
நீ எனக்கு ப்ரெசன்ட் பண்ண
பழுப்புநிற ரேமண்ட் சூட்,
நம்மைச் சுற்றியெங்கும்
நெடுநெடுவென வளர்ந்து நின்ற வன்மரங்களுக்கு நடுவே
சதா எதிரொலி எழுப்பிக்கிட்டிருக்கிற
உன் பேச்சும் என் சிரிப்பும்..
இதெல்லாம் மேலே ப்ராமிஸ் பண்ணி சொல்றேன் ..
பொங்க பொங்க ஐ லவ் யூ
அனுசரன்