முக தமிழும் கொள்கையும்

ஆரிய எதிர்ப்பு ஒரு பக்கம்
ஆதித்தமிழ் ஒரு பக்கம்

பெரியாரை மனதில்
புதைத்தாய் பார்ப்பன
ஆதிக்கத்தை எதிர்த்தாய்

இசையில் பிறந்தாலும்
முத்தமிழையும் ஆண்டாய்
முத்தமிழ் வித்தகன்
நீ என்பதற்கு பராசக்தியே
சான்று

உன் உயிரினும் மேலான
தமிழுக்கு நீ ஆற்றிய
தொண்டு அது காலம்
கடந்தும் நிற்பதொன்று

செந்தமிழை செழிக்கச்செய்தாய்
உன் செம்மொழியாள் - ஆம்

விதவைக்கு பொட்டு
வைத்தாய்
திருநங்கைக்கு
அழகு சேர்த்தாய்
ஊனத்திற்கு மாற்றுத்திறன்
தந்தாய் எல்லாம் உன் தமிழே

கவிப்புரட்சி செய்வோர்
கலப்புரட்சி செய்வதில்லை
கலப்புரட்சி செய்வோர்
கவிப்புரட்சி செய்வதில்லை
நீ இரண்டையும் உடைத்தாய்
அதனால் தான் முரண் இருந்தும்
உனக்கு கவி தொடுக்க
மனம் இலகுகிறது ...

செம்மொழிக்கு பெருமை சேர்த்த
செம்மொழி நாயகனே நீ
மறைந்தாலும் உன் தமிழ்
என்றும் மறையாது...

எழுதியவர் : சே.இனியன் (8-Aug-18, 11:18 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 44

மேலே