கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்

கவிதையே தெரியுமா - கண்ணம்மா கவிதைகள்
****************************************************************

ஒண்ணு கேக்கட்டா ம்ம்
நான் வடநாட்டுப் பொண்ணு
எனக்கு புடவை கட்டணும்னு ரொம்ப ஆசை
ஆனா கட்டத் தெரியாது
எனக்கு புடவைக் கட்ட சொல்லித் தாரியா ம்ம்
நான் தப்புத் தப்பா தமிழ் பேசறேனா ??
எனக்கு தமிழ் பேச சொல்லித்தாரியா ப்ளீஸ் ,,

நீ என்கிட்டே பேசிக்கிட்டே இருடா
என்னைவிட்டுப் போயிடாதே
என் கண்கள் என்னை உள்ளிழுக்கின்றன
நீ பேச பேச
அவை உன்னையும்
மின்மினிப் போல
வெளிச்சமுள்ள உன் கண்களையும்
என் கனவுக்குள் இழுத்திடும் ம்ம்

என் அசதி இந்த படுக்கையை
மெல்ல அழுத்துது நான் உணருறேன்
என் உடலெங்கும் சூடு பரவுது
நான் உணருறேன்
என் காதுகளை அடைத்து
கன்னங்களில் சிக்கிக் கொண்ட
முடிகளைத் தாண்டி
உன் மூச்சும் பேச்சும் என்னோடிருக்கு

இந்த குரல் தானே
எனக்குப் பிடித்த பாடல்களைக் கொடுத்து
பித்துப்பிடிக்க வச்சது,,ம்ம்ம்
நான் தூங்கின பின்னாடி
நீ என்னைவிட்டுப் போய்டுவ ம்ம்
இரு உன் கைகளை
கெட்டியா புடிச்சுக்கறேன்
நீயும் உறங்கிக்கோ ம்ம்

என் நிர்வாணம் ஸ்பரிசிக்காதவன் நீ
நினைவிழந்த நிலையில்
உன் ஆண் உள்ளங்கை நிர்வாணம்
என் மேங்கை ஸ்பரிசிக்கட்டும்

நீ வாங்கிட்டு வந்த
ரோஜா வாசனை பிரிண்ட் செய்த
பெல்ஜியம் குவில்லட்
கசக்கி போர்த்திக்கிறப்போ எல்லாம்
நீயும் நானும்
தப்பு பண்ணதுபோலவே
கெட்ட கெட்ட கனவு வருதுடா
உன் காமம் கொண்டுவரும்
எச்சில் குமிழிவிடு தூது
என் முகத்தில் உடையுது டா

வசியக்காரா

உன் ஆசைகளை எல்லாம்
என் ஆசைகளோட புதைச்சிடு
தினமும்
உன் வரவு சொல்லி
என் வாசல் ல கத்துற காக்காவ
அதிகமா நேசிக்கிறேன்
""ரெட்டிஃப் பால் சாட்டில்
நீ எனக்காக எழுதி அனுப்பிய
குட்டிக் கவிதைகளை
என் எத்தனை கைக் குட்டைகளில்தான்
சித்திரத் தைய்யல்
செய்வேன் சொல் ம்ம்""
என் பெட் coffee க்கு முன்னால தர்ற
உன் முத்தங்களுக்காகவே
இப்போவே உன்னைக்
கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு
உன்னைப்போலவே
ரெண்டு ஃபிராடு பசங்களை பெத்துக்கணும்
அந்த ரெண்டு பேரும்
உன்னைப்போலவே
லொள்ளு பண்ண பாக்கணும்
அந்த குண்டு முழிகளை
அதட்டி இரசிக்கணும்
நேரம் மறந்து
உன்னை காதலிக்கணும்
உன் நெஞ்சுலையே எப்போதும்
சாஞ்சிக் கிடக்கணும்
அப்பறம் ஒருநாள்
யாருக்கும் சொல்லாமே செத்துபோயிடணும்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (16-Jul-16, 3:03 am)
பார்வை : 295

மேலே