உன்னைத்தான் நினைப்பேன்

உன்னைத்தான்
நினைப்பேன்.....
உனக்காகவே
என்னைத்
தொலைப்பேன்.....
என் நினைவில்
நின்றவள்
அந்த நிலவிலும்
வந்து
சிரித்தாளே.....

நன்றிக்கடன்
பட்டதை
நினைவில்
கொண்டு வாழ்க்கையை
வாழ்கிறாய்.....
நீயின்றி
வாழும் என்
வாழ்க்கை
நீரின்றி துடிக்கும்
மீனின்
நிலையென
ஆச்சு......

பூமியிலே
காதல்
அந்த சாமிதான்
துணை....அவனின்றி
அசையாது
அணுவும்.....என்னவள்
துணையின்றி
அமையாது
இல்வாழ்க்கை
எனக்கு.....

என்றென்றும்
காதல்
என்றைக்கும்
என்காதல்
என்னவளை
நினைத்துக்கொண்டே
ஒவ்வொரு
இரவும்
அணைத்துக்கொள்ளும்
அவளுக்கான
தலையணையை.....

இளமையில்
தனிமை
இனம்புரியாத
கொடுமை.....
வாடும் என்
உள்ளம்.....அழகான
வாழ்க்கை
கேட்டு.....எந்தநாளும்
உன்னைத்
தேடுமே.......

எழுதியவர் : thampu (16-Jul-16, 3:36 am)
Tanglish : unnaithaan ninaipen
பார்வை : 225

மேலே