தொட்டக்குறை விட்டக்குறை - 4
தொட்டக்குறை விட்டக்குறை - 4
==============================
அப்பொழுதெல்லாம் எனக்கு
அதிகமாய்ப் பேசி
பழக்கமில்லை
நீதான் எல்லாம் கற்றுக் கொடுத்தாய்
ஏதோ
தனியா பேசணும்னு சொல்லி
அழைத்திருந்தாய்
நீ கூட இருந்தப்போ
அப்பாக்கிட்ட இருந்து
கால் வருது
அன்னைக்குத்தான்
முதல் முதலா
அவர்க்கிட்ட ஒரு பொய் சொல்றேன்..
பேசி,
செல்ஃபோனை
அணைத்திட்டப் பிறகு
சிரிச்சுகிட்டே
ம்ம் மேல சொல்லுன்னு
சொன்னதும்
நீ ஆச்சர்யமாப் பாத்த,
காஃபி குடிக்கணும்போல இருந்துச்சி,
சின்னதா தூறல் அடித்தது
நாம் இருவரும்
ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைந்திருந்தோம்
நம்மைத் தவிர
அங்க யாருமில்லை
நான் ..
அருகில் நீ
எனக்குப் புடிச்ச காஃபி
அப்போது பார்த்து
விடவேமாட்டேன் என்பதைப்போல
வெளியே
வாசிப் புடிச்சிருக்கிற மழை
அங்கவச்சு
நீ என்கிட்ட சொன்னது
இதெல்லாம்
நா இன்னும் மறக்கல
"அனு,
என்னோட லைஃப் ல
எல்லாமே இருக்குன்னு நம்பறேன்
என்னாலும்
ஏதோ ஒண்ணு
குறையிருக்கிறது மாதிரியே
தோணுறது ,,,
அது நீயா இருப்பியோன்னு ஒரு ஃபீல்
சிலரைக் காணும்போ
விலகி நடக்கணும்னு தோணும்
சிலரைக் காணும்போ
கூட நடக்கணும்ன்னு தோணும்
ஆனா உன்னைக் காணும்போ
உன் கைப்புடிச்சு
உன்கூட சேர்ந்து நடக்கணும்ன்னு தோணுது
உன்னை இழக்க விருப்பப் படலை
எப்போதும் ஐ லவ் யூ
ஃபோர் எவெர்,
அண்ட் எவெர், எண்ட் எவெர்"
யாருமில்லாத வீட்டுக்கு
அதிகாரமா வந்து
நீ செய்த மாற்றங்கள்
எல்லோருக்கும் புடிச்சிருந்துச்சு
கேக்க ஆளில்லாம
எதையும்
செய்யலாம்ன்னு சுத்தித்திரிஞ்ச
எங்களை
குணம் மாற்றியிருந்தாய்
எங்கள் வீட்டில்,
எல்லாம் இடம் மாற்றினாய்
என் இதயம் இடம் மாற்றினாய்
அந்த ஃபங்ஷன் முடிஞ்சு
நீ புறப்பட்டப்போ
நேரம் ரொம்பவும் வைகி இருந்துச்சு,
நான், உன்னை விட்டுட்டுவர
தயாராகிட்டிருந்தேன்
வாசல் வரைக்கும் போனவளை
திரும்பக் கூப்பிட்டு
அன்பா கட்டிப் புடிச்சிட்டு
உன்கூட இருக்கிற
ஒவ்வொரு நிமிஷமும்
அவளை சந்தோசமா பார்த்துக்கணும்ன்னு
அப்பா ஒரு வார்த்தை சொன்னாரு
என்னைச்சுற்றி
பொறுப்புகள்
கூடியதாக சந்தோசப் பட்டுக்கிடந்தேன்
காருல ஏறினதும்
முன்னாடி வந்து உக்காந்து
என் கைகளை இறுகிப் பிடித்தவளாய்
தோள் சாய்ந்துகொண்டாய்
மிதமான ட்ரைவிங்கில்
என் ப்ரியங்களை எல்லாம்
உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்
நீ அசந்து உறங்கியிருந்தாய்
காட்டேரி செக் போஸ்டில்
உன்னை என்னுடன் தவறாக
சேர்த்துப் பேசிய
செக்கியூரிட்டி கார்டை
உன் தூக்கம் கலையாதிருக்க இருத்திவிட்டு
கீழிறங்கி
அடித்ததாக நினைவு
உன் வீட்டுக்கு சேர்ந்ததும்
காரிலிருந்து இறங்க மனசு வராதவளாய்
என் பிடிவிட்டு இறங்கி
சற்று முன்னால் சென்றுவிட்டு
அழகாய் முகம் திருப்பி
இனி நீ போயிக்கோ ன்னு சொல்லும்போ
உன்னை விட்டுட்டு நா
எப்போ முதல் ல போயிருக்கேன்
என்னும் பார்வையிலிருந்து
ஒரு புகையாகி மறைந்துவிட்டாய் ..
அனுசரன்