கனவே கலையாதிரு

கொல்லும் நோய்
கண்டு அஞ்சாதே./
வெல்லும் அறிவென்று
வீறுநடை போடு./
துள்ளும் வயதில்
துவண்டு விடாதே./
பிள்ளை மலரே
மகிழ்ந்து விளையாடு./

நாளும் பொழுதும்
துக்கம் சுமக்காதே/
நாளை நமதே
என்று சிரித்திடு./
சரித்திரம் தோற்றிடும்
எனக் கலங்கிடாதே./
கனவே கலையாதிரு
என்று கட்டளையிட்டிடு./

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:51 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 10

மேலே