வக்கணையா பேசி பேசி வடம் போட்டு இழுத்த மச்சான்

வெண்டக்கா விரல
தொட்டுக்க போறேன்/
வெள்ளரிக்கா வித்துக்கிட்ட
காசில பொன்னு
போட்டுக்க போறேன் /
கண்ணுக்கு பட்டுக்கிட்ட
இடமெல்லாம்
பார்த்துக்கப் போறேன் /
கருவாச்சி பொண்ணுக்கு
பூ வச்ச ரவுக்க தச்சிக்க போறேன் /

குண்டூசியும் கேட்டுக்க மாட்டேன் /
கொண்ணுகிட்டு வந்தாலும்
ஏத்துக்க மாட்டேன் /
கருப்பட்டி சொல்லழகி
கருவண்டு கண்ணழகி
ஒன்னைய சேத்துக்க போறேன் /
காத்து கருப்பு அண்டிக்காம
கருகமணி போட்டுக்க போறேன் /
யே நெஞ்சத்த ஒனக்காக
பஞ்சனையா மாத்திக்க போறேன் /

சோக்காத்தான் இருக்கு மச்சான் /
நீ சொல்லிக்கிட்ட அம்புட்டும் /
இம்புட்டும் நாவோடு
நின்னுடிச் சென்னா /
நான் யென்ன செய்வேன் மச்சான் /

பல்லு விழுந்த அப்பாத்தா
விடியக்காலயில கூப்புட்டு /
அடியே அருக்காணி
பவளத்தோட மவந்தான்
உனக்கு சரியான
சோடி என்னனுச்சி மச்சான் /

எப்பாத்தா பார்த்தா அவயல
என்னு கேட்டுகிட்டேன் மச்சான் /
ஊட்டாண்டா நேத்தைக்கு வந்துடிச்சி
யென சொல்லிடிச்சு மச்சான் /
திக்கட்டு போனேன் நானும் மச்சான் /

குச்சி எடுத்துக்கையிலே
ஒளிஞ்சி ஒளிஞ்சி
பார்த்துகிட்டது போதும் மச்சான் /
யெங்க வீட்டாண்டா பக்கம்
நோட்டம் போட்டுக்காதே மச்சான் /
கொய்யா தோப்புக்க நின்னுக்க மச்சான் /
ஆத்தோரம் போய்க்க
அங்கிட்டு வாறேன் மச்சான் /

வக்கணையா பேசி பேசி
வடம் போட்டு இழுத்த மச்சான் /
பாக்கு வெத்தல தட்டோடு வந்தாக்கா சத்தியமா பக்கத்திலே வந்து
நின்னுக்குவேன் சின்ன மச்சான் /

ஆர் எஸ் கலா

எழுதியவர் : ஆர் எஸ் கலா (13-Sep-22, 1:24 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 73

மேலே