உன் இதயக்கூட்டில் தாகம் தீர்க்க வேண்டுமடி 555

***உன் இதயக்கூட்டில் தாகம் தீர்க்க வேண்டுமடி 555 ***


ப்ரியமானவளே...


பாலைவன
மணற்பரப்பை பார்...

காற்றசைவில் அகடு
முகடாக தோற்றம்...

உன் கருங்கூந்தலின் வளைவு
நெளிவுகளை நினைவூட்டுதடி...

தனித்திருக்கும்
ஒற்றை மரம் பார்...

னக்காக
நான் காத்திருந்த
நினைவுகள் வந்து செல்லுதடி...

யாரும் செல்லாத
பாலைவன மணற்பரப்பில்...

முதல்
அடிவைத்து செல்கிறேன்...

தெளிவாக இருந்த
உன் இதயத்தில்...

நான் காதலென்
னும்
விதைபோட்டேன்...

உன் இதய ஊற்றில்
நான் தாகம் தீர்க்க...

பாலைவனத்தில் ஒளிரும்
பௌர்ணமி நிலவாய்...

நீயும் வெளிச்சம் தந்தாய்
உன் இதயகூட்டில்...

பூவே உன்
கைகளில் மருதாணியிட்டு...

நான் காலையில்
ரசிக்க வேண்டும்...

உன் முகமும் என்
உடையும்
சிவந்திருப்பதை...

பாலைவன தேசத்திலிருந்து
காதல் தேசத்திற்கு...

நானும் வருகிறேன்
நாளை உன்னைக்கான.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (13-Sep-22, 5:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 289

மேலே