தாவரங்களக்கு ஓரு கவிதை

🌲🌳🌴🌱🌿🪴🪴🎍🍀☘️🌿

*தாவரங்களுக்கு*
*ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🎄🌲🌳🌴🌱🌿☘️🍀🎍🪴🌴


*தாவரங்கள்*

பசுமை நிறம்
இவைகளின் சீருடைய ....

காற்று துணியை
தூய்மை செய்யும்
சலவை தொழிலாளி....

பூமி
வெப்பமடைவதை தடுக்க
இயற்கை
ஆங்காங்கே
பொருத்தி
வைத்திருக்கும் ஏசி...

இயந்திரங்கள்
யாரையும்
சார்ந்து வாழாமல்
சுயமாக வாழும்
தன்மானமுடையது.....

ஆக்சிஜனை
உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகள்.....

இருக்கும் வரை
பூ காய்கனி
இலை தலை
மூலிகை தருகிறது....
இறக்கும் போது
சட்டம் விட்டம்
பலகை காகிதம்
விறகு சருகு தருகிறது....
யானையைப் போல்
இவைகள்
இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்

இரண்டு கைகள் இருந்தும்
சமூக விரோதிகள்
ஆற்று மணலை
திருடுவதை
நம்மால்
தடுக்க முடியவில்லை...
ஆனால்
வெள்ளம்
பெருங்காற்று
தன்னை
சுற்றி இருக்கும்
ஒரு பிடி மண்ணைக் கூட
அள்ளி என்ன
அரித்துக் கூட
செல்ல முடியாமல்
வேறால் தடுத்து
வெற்றிகொள்ளும்
ராணுவ வீரன்.....

இயற்கை அன்னை
அங்கும் இங்கும்
கட்டி வைத்திருக்கும்
நிழல் கூடங்கள்....

விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும்
பூச்சிகளுக்கும்.....
அவைகளை போல்
எளிமையாக வாழும்
ஏழைகளுக்கும்
வாடகை வாங்காத
வீடளிக்கும் வள்ளல்...

இவைகள்
பூமியெங்கும்
கிளைகளை வைத்திருக்கும்
சித்த வைத்தியசாலை.....

தா வரம் என்று இறைவனிடம் கேட்பதை விட்டு ....
இறைவன் கொடுத்த வரமான
தாவரங்களை
பாதுகாப்பது பற்றி
யோசிப்போம் !
நேசிப்போம் !

*கவிதை ரசிகன் குமரேசன்*

🎄🌲🌳🌴🌱🌿☘️🍀🎍🪴🌴

எழுதியவர் : கவிதை ரசிகன் (13-Sep-22, 8:13 pm)
பார்வை : 79

மேலே