ஆத்மாவின் சாவம்

கண்ணருகே வந்தவளே
என்னவளானாயே
என்னவளானவளே
என்னவளானதுமே
இன்னொரு துணை தேடி
என்னை விட்டு ஓடினாயே
தேடியதன் விளைவு
பாவாளியானாயே .

பாவங்களை தொலைத்திட
எவ்வழி நாடிடுவாயோ
கடுகளவும் உன்மேல்
இனி கருணையில்லை
கடந்து செல்லும் காலமெல்லாம்
தொடர்ந்து
வந்திடும் முள்ளாய் வினை.

ஊனம் வடிந்திடும் உடலுக்குள்
தேடிக் குடியேறிடும் நோய்களின்
தொல்லை
துடித்திடும் நாடிக்குள் பயம்
வெடித்துக் கொல்லும் என்பதும்
உண்மை

ஆட்டி வைத்தாய்
நீ என்னை அன்று
பொறுத்துக் கொண்டேன்
பொண்டாட்டி என்று .

பூட்டி விட்டாய்
நீயோ உள்ளமதை
பொறுத்தும் வெறுத்தும்
வாழ இயலவில்லை
போர்த்திக் கொண்டேன் நானும்
மண்ணை .

ஊரார் சேற்றை வாரி
இறைக்க
உன் நாத்தம் ஊருக்குள்
பறக்க
வெக்குன்று நீ கதறித்
துடிக்க

அருவியாகக் கொட்டும்
உனது கண்ணீரைத்
தொடைத்தெறியாமல்
பக்கம் அமர்ந்து நானும்
பார்த்திருப்பேணடி
பாதகத்தியே .

எழுதியவர் : ஆர் எஸ் கலா (23-Jul-22, 1:10 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 65

மேலே