கண்ணன் என்னும் மாயோன்
தத்தி தத்தி நடைபோட்டு வருகின்றான்
யசோதை இளஞ்சிங்கம் கண்ணன் அவன்
கழல்களில் கொஞ்சும் வெள்ளி கொலுசு
'கல்' , 'கல்' என்று ஓசைதந்து பின்னே
அதுவே 'ஓம்' 'ஓம்' என்று ஓம்காரம்
பரப்ப அதைக்கேட்டு யசோதையும் மற்றும்
ஆயர்குலத்து மக்களெல்லாம் தம்மை
அறியாது கேட்டும் பார்த்தும் வியக்க
அங்கு வந்த குலகுரு கர்கமுனிக்கு
புரிந்தது இதன் ரகசியம் ஆம்
அதுதான் இந்த பாலகன் மண்ணில்
வந்து பிறந்த மானிடக் குழந்தை
அல்லன் இவன் உலகோரை உய்யவைக்க
இங்கு தானே வந்தவரித்த மாயக்குழந்தை
மாமாயன் இவன் கிருட்டிணன் , நாராயணன்
வைகுந்தம் இவன் இருப்பிடம் என்று
நந்தனுக்கு யசோதைக்கும் கூறினாரே