கதிரவனின் திருவிளையாடல்

மின்னும் பொன்னை
விண்ணில் வீசி.
வேடிக்கை செய்வது.
வாடிக்கையாம் ஆதவனுக்கு.

உலகம் எங்கும் ஒளி
பரப்பியே புதுமை
செய்வானாம்
பகலவன் புதுமை செய்வானாம்.

ஆழ்கடல் ஓரமாக
மழலை ஓடி விளையாடும் அந்தி
மாலையிலே செவ் நிறம் போன்ற உடை
அணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.

கடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி
தஞ்சம் அவள் அங்கம்
என அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்
ஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.

ஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து
எழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்
பொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.
கரும் உடலோடு உலா
சென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.

சில்லென வீசும் தென்றல் கொஞ்சம் தீண்டிடவே சிந்துகிறாள் கண்ணீராய்
வரண்ட பூமி எங்கும்
தங்கிடவே கண்ணீர்

மழையாக தன் மழலையைக் கண்டாள் வெயிலாக தன் தந்தை வந்தாராம்
மீன்டும் ஆவியாக விண்ணை நோகி சென்றது பிள்ளை.
கதிரவனின் திருவிளையாடல் என்றும் தொடர் கதை ஆனது.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (18-Aug-15, 12:12 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 176

மேலே