சௌந்தர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சௌந்தர் |
இடம் | : கோவை (தற்போது மதுரை) |
பிறந்த தேதி | : 18-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 483 |
புள்ளி | : 81 |
எனது முழு பெயர் சௌந்தரராஜன் நாகராஜ், எனது ஊர் கோவை. தந்தை திரு நாகராஜ், தாய் திருமதி பானுமதி. மரபணு தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தற்போது மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில், உயிரியல் புலத்தில் மரபணு தொகுபியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் உள்ளேன். சிறு வயது முதலே கவிதைகள், கதைகள், இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம். என் படைப்புகள் கல்லூரி இதழ்களில் வெளிவந்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகள் தர வேண்டும் என்னும் முனைப்பு உள்ளது. நண்பர்கள் எனது படிப்பினை படித்து தங்கள் மேலான கருத்துக்களை சொல்லவும்.
"அப்போ முடிவா நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு
"அப்போ முடிவா நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு
எண்ணம் என்னும் ஊரினிலே எழுத்து என்னும் தேரினிலே
வண்ண வண்ண நிறம்காட்டி வான வில்லின் கரம்போல
அள்ளி அள்ளி சொல்லெடுத்து அழகாய் தமிழில் அதைசேர்த்து
சின்னச் சின்னக் கவிதைகளை சேர்த்து வைத்து எழுதுகிறேன்
தெள்ளத் தெளிய தமிழமுதை தேர்ந்து தெளிந்த கருத்ததனை
உள்ளம் கடக்கும் சொற்கொண்டு உணர்வு பூக்கும் பொருள்கொண்டு
சொல்லச் சொல்லச் சொக்கவைக்கும் கவிதை என்னும் காவிரியில்
வெள்ளம் வெள்ளம் எனும்போல அள்ளும் கவிதை அதைப்பாராய்
கன்னல் மொழியாம் தீந்தமிழே கருதக் கருதக் கவிபெருகும்
மின்னல் ஒளிபோல் ஒருகவிதை மிகவும் விரைவாய் உருவாகும்
பின்னல் சடையாய் சொற்களெல்லாம் அருகே வந்தே அசைந்தாடும்
முன்னம
உன்னை நானென் உள்ளத்துள் உறிஞ்சிக் கொண்டு உயிர்பெற்றென்
முன்னை நாளும் மொழிந்ததொரு முழுப்புண் ணியமிங் கெனைவந்து
பின்னை ஆளும் பெரும்பேறும் பண்ணி ஆட்கொ ளும்அருளே
தன்னை யருளும் தகைமைதனை தமியேன் ஏதென் றுரைப்பேனே - சௌந்தர்
உன்னை நானென் உள்ளத்துள் உறிஞ்சிக் கொண்டு உயிர்பெற்றென்
முன்னை நாளும் மொழிந்ததொரு முழுப்புண் ணியமிங் கெனைவந்து
பின்னை ஆளும் பெரும்பேறும் பண்ணி ஆட்கொ ளும்அருளே
தன்னை யருளும் தகைமைதனை தமியேன் ஏதென் றுரைப்பேனே - சௌந்தர்
உவப்பாய் உணர்வாய் உயிராகி என்னுள்
சிவமாகி நிற்கும் சிவபாலன் - பொற்கரத்தில்
வெற்றிவேலும் உற்றிருக்க மற்றைய மாயையும்
செற்றிடுமோ இங்கெனை வந்து!!! - சௌந்தர்
உவப்பாய் உணர்வாய் உயிராகி என்னுள்
சிவமாகி நிற்கும் சிவபாலன் - பொற்கரத்தில்
வெற்றிவேலும் உற்றிருக்க மற்றைய மாயையும்
செற்றிடுமோ இங்கெனை வந்து!!! - சௌந்தர்
அறிவியற் கதை
லஷ்மி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை.. எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி; பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பின் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னாhன் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை அவளுக்கு வைத்தார்கள். அவள்
எங்கும் நான்..
நீக்கமற நிறைந்த
நோக்கம் நான்!!!
ஒரு பறவை
தன் பேடுடன் கூடிடும் பொழுதில்,
கதிரவன் கதிர்கள்
மலையினை தழுவிடும் பொழுதில்,
இனிய இசையில்
இசைந்திடும் பொழுதில்,
என்னுள் பரவியிருக்கும்
காதலின் பிரவாகதினை
பருகத்தலைப்படாமல்
எங்கோ எதிலோ அதனை
தேடிடும் நொடிகளில்,
இறையின் கரங்களில்
கரைந்திடும் பொழுதில்...
என் நான்
கரைந்து...
கவிழ்ந்து...
நானாகிறேன்!!!
என் உள்ளிருக்கும் துணைதனை
உடனிருக்கும் எனைதனை
என்னுளிருந்து அல்லது
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான்
நான்!!!
பிரபஞ்சபெருவெளிகளில் அலையும்
ஒரு துகள் நான்...
தேடலின் உணர்வு பெற்று
தெளிய வந்திருக்கும்
இந்த கவிமழை சிந்துவது
உன்னால்!!!
கடலாய் என்னுள்
கவிழ்ந்துவிட்டாய்!!!
ஒருநிலை தன்னை
உறுநிலையாய் நீ தந்தாய்!!!
மழை போல என்னுள்
மடைதிறந்து
கவிதை ஜனனம் செய்தாய்!!!
எங்கும் எல்லா உயிரிலும்
நீ!!
நின் சாயல்...
உன் வியாபகம்!!!
நாதத்தின் நாயகமே..
போதத்தின் பூரணமே...
என்னை அன்பாய் கணித்திடும்
கனியே...
உன்னால்,
உணர்வுபெற்றேன் உயிர்பெற்றேன்!!!
தன்னந்தனியாய் என்னுள்
முளைத்த சுயமாய்
சுயமாய் வளரும் சுயமே!!!
இது பிதற்றல்..
நீ
என் நெஞ்சை தொடுவதால் வந்த பிதற்றல்!!!
இந்த நாதவெள்ளம்
என்னுள் நகர்வதால் வந்த பிதற்றல்!!!
இன்னும் நகர்வாய்...
என்னுள் என்னுள் என
உழைத்து சோர்ந்துவிட்டோம்
உள்ளம் களைத்துவிட்டோம்
இல்லத்தில் இடமில்லை
இருப்போர்க்கு இதயமில்லை
இயற்கை தந்த பரிசாக
இளைப்பாற மரமுண்டு
இறக்கும்வரை மனங்கொண்டு
இணைந்தே கழித்திடுவோம் !!
விடியல்கலெல்லாம் விலகிச்செல்வதாய்
ஒரு உணர்வு......
இரவுகள் மட்டும் துணை வருவதாக
ஒரு எண்ணம்......
அழகுகள் எல்லாம் என்னிடம்
யாசிக்கின்றனவாம்
-பல பைத்தியங்களின் உளறல்....!
இன்று இடியுடன்
மழையாம்.........!
விழியோரம் உலர்ந்துபோன
கண்ணீர்த்துளிகள் வழிவிட்டிருக்கவேண்டும்.....!
ஆசைகள் துன்பங்களுக்கு
காரணமாம்......
என் துன்பங்கள் யாருடைய
ஆசையாக இருந்திருக்கும்.......?
காதல் வலிக்குமாமே.....
அப்படியா.....?
இன்னும் என்னுயிர்
போகவில்லையே........!
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களின்
நண்பனாமே.......
நான் உன்னில் எதை எதிர்பார்த்தேன்....?
வரதட்சணைகள் மாமியார்
வீட்டிற்கு