ஏனோ-வித்யா

விடியல்கலெல்லாம் விலகிச்செல்வதாய்
ஒரு உணர்வு......
இரவுகள் மட்டும் துணை வருவதாக
ஒரு எண்ணம்......
அழகுகள் எல்லாம் என்னிடம்
யாசிக்கின்றனவாம்
-பல பைத்தியங்களின் உளறல்....!
இன்று இடியுடன்
மழையாம்.........!
விழியோரம் உலர்ந்துபோன
கண்ணீர்த்துளிகள் வழிவிட்டிருக்கவேண்டும்.....!
ஆசைகள் துன்பங்களுக்கு
காரணமாம்......
என் துன்பங்கள் யாருடைய
ஆசையாக இருந்திருக்கும்.......?
காதல் வலிக்குமாமே.....
அப்படியா.....?
இன்னும் என்னுயிர்
போகவில்லையே........!
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களின்
நண்பனாமே.......
நான் உன்னில் எதை எதிர்பார்த்தேன்....?
வரதட்சணைகள் மாமியார்
வீட்டிற்கு வரமாமே.......
என் அம்மா உனக்கு யார்......?
வார்த்தைகள் வலுபெரும்போது
மௌனங்கள் உடையுமாமே......?
சாபம் கொடுக்கவா....? வரம் கொடுக்கவா...?
****************************************************************************