உன்னால் இந்தப் பிதற்றல்

இந்த கவிமழை சிந்துவது
உன்னால்!!!

கடலாய் என்னுள்
கவிழ்ந்துவிட்டாய்!!!

ஒருநிலை தன்னை
உறுநிலையாய் நீ தந்தாய்!!!

மழை போல என்னுள்
மடைதிறந்து
கவிதை ஜனனம் செய்தாய்!!!

எங்கும் எல்லா உயிரிலும்
நீ!!
நின் சாயல்...
உன் வியாபகம்!!!

நாதத்தின் நாயகமே..
போதத்தின் பூரணமே...
என்னை அன்பாய் கணித்திடும்
கனியே...

உன்னால்,
உணர்வுபெற்றேன் உயிர்பெற்றேன்!!!

தன்னந்தனியாய் என்னுள்
முளைத்த சுயமாய்
சுயமாய் வளரும் சுயமே!!!

இது பிதற்றல்..
நீ
என் நெஞ்சை தொடுவதால் வந்த பிதற்றல்!!!

இந்த நாதவெள்ளம்
என்னுள் நகர்வதால் வந்த பிதற்றல்!!!

இன்னும் நகர்வாய்...
என்னுள் என்னுள் என்னுள்
இன்னும் என்னுள்
எங்கேயோ
என்னை நானறியா
மனக்குகையில் கொண்டு சேர்ப்பாய்...

என்னை தொலைத்திடுவாய்!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (23-Jan-16, 11:42 pm)
பார்வை : 198

மேலே