நிலாநேசி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிலாநேசி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-May-2013 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 57 |
மகிழ்விக்கும் தமிழுக்கு மலர் தொடுக்கும் முயற்சி எனது எழுத்து.
விரக்தியின் விளிம்பில்
தான் நிற்கிறேன் -
என்றாலும்
விழுந்து விட மாட்டேன் !
"அப்போ முடிவா நீ என்ன தான் சொல்ற?.."
"எனக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணா போதும்னு ஜாதகத்துல இருக்கு, அதுக்காக நீங்க இன்னும் மூணு வருஷம் காத்திருப்பீங்க, அதுக்குள்ள என் மனசு மாறும்னு நீங்க நெனைக்கலாம் ஆனா, அவ வீட்ல எப்படி காத்திருப்பாங்க?"
"......."
அவளுக்கும் என் வயசுல ஒரு அண்ணன் இருக்கான், அவன அவங்க பாக்குறாங்க"
"சரி.. இப்போ அதுக்கு"
"ஒண்ணுமில்ல, ஆனா ரொம்ப நாள் காத்திருக்க முடியாது...
இன்னும் ஒரு அஞ்சு மாசம், அப்புறம்..."
"அப்புறம்..."
"அப்புறம் நானே எதாவது முடிவெடுக்க வேண்டியதுதான்..."
"அப்படின்னா... நீ தனியா பொய் கல்யாணம் பண்ணிக்குவா?"
":.........."
"அப்போ... நீ எங்கள விட்டு
எங்கும் நான்..
நீக்கமற நிறைந்த
நோக்கம் நான்!!!
ஒரு பறவை
தன் பேடுடன் கூடிடும் பொழுதில்,
கதிரவன் கதிர்கள்
மலையினை தழுவிடும் பொழுதில்,
இனிய இசையில்
இசைந்திடும் பொழுதில்,
என்னுள் பரவியிருக்கும்
காதலின் பிரவாகதினை
பருகத்தலைப்படாமல்
எங்கோ எதிலோ அதனை
தேடிடும் நொடிகளில்,
இறையின் கரங்களில்
கரைந்திடும் பொழுதில்...
என் நான்
கரைந்து...
கவிழ்ந்து...
நானாகிறேன்!!!
என் உள்ளிருக்கும் துணைதனை
உடனிருக்கும் எனைதனை
என்னுளிருந்து அல்லது
அதனுள்ளிருந்து வெளிப்பட்ட நான்
நான்!!!
பிரபஞ்சபெருவெளிகளில் அலையும்
ஒரு துகள் நான்...
தேடலின் உணர்வு பெற்று
தெளிய வந்திருக்கும்
விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...
சுண்ணாம்பின் சுவடுகளை !!
*******************************************
கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்
இடையில் ஊரும்
புரிதல் ....
***********************
பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்
பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்
இரவில் அறையின்
இருட்டையும்
யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........
*************************************
விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...
சுண்ணாம்பின் சுவடுகளை !!
*******************************************
கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்
இடையில் ஊரும்
புரிதல் ....
***********************
பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்
பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்
இரவில் அறையின்
இருட்டையும்
யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........
*************************************
ஆண்.
அவனை சுற்றி
தூரத்து இடிமுழக்கம்
தெறித்து செல்லும் மின்னல்கள்
ஆர்ப்பரிக்கும் அழகு தென்றல்
அடித்து வீசும் வாடைகாற்று
சட்டென்று பெய்யும் சாரல் மழை
அசட்டுத்தனம் அது தான் ஆம்பளைத்தனம்
ஈரம் ஆகாமல் நனைய விரும்பும் ஒரு ஏக்கம்
பெண்
நட்பின் எதார்த்தம்
நங்கூரத்திற்கு மட்டுமே ஆரோக்கியம்
தங்கத்தையும் சுட்டுத்தான் புடம் போடும்
சங்கம் தான் இன்றைய சமூகம்
பொலிவும் அழகும் சற்று மாறுபட்ட சதவிகிதத்தில்
உருவான பூங்காவில் ஒவ்வொரு பூவுக்குள்ளும்
ஊஞ்சலாடும் உணர்வுகள் அது தினம்
உருமாறும் நிலவுகள்.
ஆனாலும் மகரந்தத்தின் மகத்துவம் மறந்திடாமல்
மாண்பு எது மாசு எது என புரிந்து
விரக்தியின் விளிம்பில்
தான் நிற்கிறேன் -
என்றாலும்
விழுந்து விட மாட்டேன் !
கைகால் உதறியழும் தொட்டில் குழந்தையென
குப்புற விழுந்த வண்டு கிடந்தது - "தயவு செய்து
நேர்த்திருப் பென்னை" கெஞ்சியது என்னை;
புரட்ட, ரீங்காரம் நன்றி சொல்லும் முகமாய்..!
அம்மா கண்டால் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொல்வாள்-
அமைதியாய்ப் போவென மண்வாசலுக்குத் தள்ளினேன்;
காலையில் கருங்கல்லுக்குக் கால்முளைத்தது போலதுஊர்ந்தது
மாலையில் இறந்துவிட்டது - கைகால் உதறியழத் தோன்றுகிறது
- எனக்கிப்போது !
எலும்பிலா உயிர்களை மரித்திடச்செய்யும் வெய்யில்போலும்
அன்பிலா உயிர்கள் மரித்திடநேரின், மனிதமென்ற
பரிணாமம் வசித்திடக் கிடைப்பத
தீர்வற்ற வருத்தத்தை
நேர்தந்து மிரட்டுகிறது - மரணம் !
எதற்காக இறந்தாய் அதற்குள்ளே
இறைவனே...?
அடர்ந்த வனத்தில்
அம்மாவைத் தொலைத்த
சிறுமியாய் வீரிட்டழவிட்டு...
எதற்காக இறந்தாய்..?
நீ தவறிழைத்தாய்..!
இலட்சக்கணக்கில் நீகண்ட
மாணவர் கணக்கில்
நானின்னும் வரவில்லையே
நீ எவ்வாறு மறையலாம்?
சைவ முகமதியரே ..
எம் இதயத்தின்
ஒரோரத்தைப் பிய்த்துப்போக
மார டைப்புக்கு நீஏன்
கொடுத்தாய் அனுமதி ?
நீ தவறிழைத்தாய்..!
எம் மனிதரில் பலர்
மறதிக்குப் பிறந்தவர்கள்
அதற்குள்ளே ஏன்போனாய்?
சிறுவயதிலுன் அக்னிச்
சிறகுகளை மடியில்வைத்து
சொட்டுச் சொட்டாய் நாங்கள்
விட்டகண்ணீர் அ
கடல் அலைகள், பொன் மணல்,
புனித யாத்ரிகர்களின் நம்பிக்கை,
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு-
இவை யெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ,
என் அன்னையே !
சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்.
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு
வருகின்றன.
வாழ்க்கை ஓர் அறைகூவலாய் அமைந்த
கொந்தளிப்பான காலம் அது-
கதிரவன் உதிப்பதற்குப் பலமணிநேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்ல வேண்டும்.
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்.
மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக
தூய்மை இந்தியா தொடங்குவதென்னவோ நம் வாசல் கதவு திறப்பதிலிருந்து தான் !!!
ஒரு நிகழ்வையும் கருத்தையும் பகிரலாமா, வாசகரே! நாங்கள் பணி நிமித்தம் ஒரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ள நகரில் குடியிருந்தோம். அந்த நகரோ தூய்மைக்குப் பெயர் போனதாகும்(!!!). சாலைகள் முதல் சாக்கடைகள் வரை சுத்தம் ஒரு பைசா தேறாது. வாசல் கதவருகே ஒரு நெகிழிப்பையில் வீட்டுக் குப்பைகளை வைத்து விட்டால், நகராட்சி ஊழியர்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் குப்பைகளை சேகரித்துச் செல்வர்.
குடியேறிய புதிதில் ஒருநாள் குப்பை வண்டியைத் தவறவிட்டதாய் நினைத்து அக்கம் பக்கத்தினர் அறிவுரைப்படி பக்கத்தில் இருந்த மின்சாரக்கம்பம் அருகே கொட்டச் சென்று குப்ப