4 எழுதக் கொஞ்சம்
விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...
சுண்ணாம்பின் சுவடுகளை !!
*******************************************
கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்
இடையில் ஊரும்
புரிதல் ....
***********************
பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்
பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்
இரவில் அறையின்
இருட்டையும்
யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........
*************************************