anbu

பிறவி பயனை அடைந்து விட்டேன்
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை

எழுதியவர் : Ramya (7-Jan-16, 11:32 am)
பார்வை : 341

மேலே