தொடரி தேவதை

கண்கள் கூறுகிறது
ஆயிரம் காந்தங்களின் கவர் காதலை!

சந்தனக் காப்பின்
சங்கமமாய் பெண் தெய்வ சிலை !

நூறாயிரம் சவுக்கடியாய்
ஈர்க்கிறது உந்தன் ஒற்றை பார்வை !

உந்தன் கால்நக வண்ணக்
குழப்பி கூறுகிறது
உந்தன் மொத்த அழகை !

உயிரின் ஒரு ஓரம் நட்ட
ஒற்றை நாற்றாய்
வளர்கிறது எந்தன் மனம் !

உயர் சாதி மடுவாய்
கீழ் சாதி மலையாய்
நிற்கிறேன் மனதின் கலக்கத்துடன்!

மலை மேகம் மௌனமாய்
உள் கன்னம் தொட்டு செல்கிறது
கனத்த காதலுடன் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (20-Nov-18, 12:44 am)
Tanglish : thodari thevathai
பார்வை : 298

மேலே