ஓர் காதல்
தினம் பார்க்கும் கண்ணாடி
அழகாய் காட்டுகிறது !
வானில் விழும் மழைத்துளி
கோளவடிவம் கண்டேன் !
தினம் சுவாசிக்கும் நாசிகளுக்கு
தரிசனம் காதல்வாசம் !
தினம் பேசும் வார்த்தைகள்
கவிதைகளாய் பாய்கின்றன !
அலைபாயும் மனம் நினைவுகள்
குவளையில் மூழ்கின்றன - மகிழ்ச்சியில் !
தினம் எடுக்கும் எழுதுகோல்கள்
கவிதைகளை பொழிகின்றன !
தினம் பார்க்கும் வாசல்க்கோலங்கள்
தேவைதைகளாய் தெரிகின்றன !
தினம் பார்க்கும் கழுகு - ஏனோ
இன்று பெரிய - குயிலாய் !
என் வெட்கம் எந்தன்
எழுத்துக்களில் கண்டேன் !
தினம் பார்க்கும் கடலலைகள்
இன்று - மனதில் கண்டேன் !
தினம் கூடிய நாட்கள்
பின்னோக்கி பாய்கின்றன !
தேர்வறை பயம் திரும்பக்
கண்டேன் இன்று - அணு நொடியும் !
பதின்ம வயது திரும்புகிறது
நிலை அறியாமல் !