இரு பாதி கனவுகள்

மென்னிசை மௌனம் - மலை
வீச - குயில் வண்ணம்
ஓசை விழுந்தது
உந்தன் இடைக்குரல் !

காற்றுகள் மோதிக் கொள்கின்றன
வார்த்தை கடல் - தரை
தட்டுகின்றன - உன்
அழகின் சொகுசில் !

சொல்லத் தவிக்கும் உள்
நாக்கு - தயங்கி பறக்கும்
பருந்து - இடை நிற்கும்
கால்கள் !

சொந்த உழைப்பு - கற்கும்
சீவாத தென்னை பாலை
மொத்தக் குவியலாய்
உந்தன் இடை !

ஆழ்கடல் ஊற்று - நீ
நடுக்கடல் அலை - இரண்டின்
காதலாய் - எவரும்
காணாததாய் - நாம்!

பிற்பாதி நடுநிசி - மாற்றம்
காணாத தவிக்கும் - பூக்கள்
பறவா சிறககளுடன்
நம் காதல் - மனதினுள் !

இளம் வெயில் நன்மை
அந்தி சாயும் நன்மை
மனம் தாண்டிய வெண்மையுடன்
நெருங்கா மகிழ்ச்சி மடியில் !

ஆயுள் முடியும் - ஆற்றங்கரை
ஆயுள் தொடங்கும் - ஆண்மை
இரு மன - ஓர் புள்ளியின்
ஆதியில் - காதலாய் யார் !

ஏகாந்த நெல்மணியின் மடியில்
கற்பனை வயலில் தலை
வைத்து - உறங்கித்
அறுவடை செய்தேன் - உன்னை !

நெடுநாள் பூந்தென்றல்
சுவாசத்தில் உயிர் பெற்றாய நீ !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 1:33 pm)
பார்வை : 135

மேலே