ரசிப்பதில்லையே

நிழல் வானம் ரசித்த
வர்கள் முகில்
கூட்டம் ரசிப்பதில்லையே !

மனம் மகிழ ரசித்த
வர்கள் அந்த
மகிழ்ச்சியை ரசிப்பதில்லையே !

ராகம் ரசிக்க ரசித்த
வர்கள் உணர்ந்த
உணர்ச்சிகளை ரசிப்பதில்லையே !

சூரிய மறைவை ரசித்த
வர்கள் மெருகேற்றிய
கண்களை ரசிப்பதில்லையே !

பூக்கள் மலர ரசித்த
வர்கள் மலர்ந்த
நேரத்தை ரசிப்பதில்லையே !

வழிகளை உணர்ந்து ரசித்த
வர்கள் தந்த
உறவினை ரசிப்பதில்லையே !

மலர்க் கூட்டங்களை ரசித்த
வர்கள் தந்த
செடிகளை ரசிப்பதில்லையே !

வர்ணனை திரவியத்தை ரசித்த
வர்கள் விளைந்த
பேனா - மையை ரசிப்பதில்லையே !

தேன்ருசிக்க ரசித்த
வர்கள் தேனீக்
கூட்டை ரசிப்பதில்லையே !

நெடுஞ்சாலை பயணம் ரசித்த
வர்கள் அதன்
சாலைகளை ரசிப்பதில்லையே !

மௌன கடலை ரசித்த
வர்கள் மௌன
அலைகளை ரசிப்பதில்லையே !

காதலர் களையே ரசித்த
வர்கள் காதலை
ஒருபோதும் ரசிப்பதில்லையே !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 1:20 pm)
பார்வை : 95

மேலே