பயமற்ற சிறகுகள்

பார்த்துக்கொண்டேயிருந்தேன்
பறக்கும் தேவதைகள்...
பரவசத்துடன்...
எல்லோரும் பறக்கிறார்கள்.
யாருக்கும் அங்கே
நடக்கத் தேவையில்லை.
வெள்ளைச் சிறகுகள்
வெடவெடத்து அடித்தன
உயர... உயர...
என் கண்களும்
உயரே... உயரே...
தேடி வந்தாள்
தேவதையொருத்தி- யென்
தேவை யாதென
உணர்ந்தவளாய்...
"நானும் உம்மைப்போல்
உயரே... வேண்டும்"
என்ன அதிசயம்!
எனக்கும் இப்போது
இரட்டைச் சிறகுகள்.
அசைத்துப் பார்த்தேன்.
இப்போது...
நானும் உயரே...
உயர உயர
உள்ளுக்குள் உதறல்...
உயரம் என்னவோ...?
உற்றுப்பார்த்தேன்.
ஆ....
வீழ்ந்துகிடக்கின்றேன்.
தேவதை வந்தாள்.
"சிறகுகள் அல்ல - தேவை;
தேவை
பயமற்ற சிறகுகள்-
பறப்பதற்கு..."

எழுதியவர் : ஆன்றிலின் (22-Feb-14, 3:15 pm)
பார்வை : 68

மேலே