வாழுகின்றோம்
இளைஞனே
வளைய வளைய புகையிழுத்து
வட்டத்துள் சிக்கிக்கொண்டு...
சபலக் குழியில்
சலனமின்றி விழத்தயார்.
சாதனைகள்
சங்கடத்துடன்
எட்டிப்பார்த்துக் கொள்ளும்
எட்ட நின்று
ஏக்கத்துடன்.
எங்கோ?
எதற்கோ?
எப்படியோ?
ஆனால்... வாழுகின்றோம்.