ஒரு சாண் வயிறு

ஒரு சாண் வயிறு,
ஒருசாண் வயிறுயிது,
உருட்டிப் பாக்குது;
உடம்பை ஆட்டிப்படைக்கிது;
ஓட ஓட விரட்டுது
படாய் படுத்தி,
ஓடாய் உடலை தேயவைக்குது.

மாடாய் உழைக்கும் மனிதனாகட்டும்,
மாளிகையில் வசிக்கும் மனிதனாகட்டும்,
ஒருசாண் வயிற்றுக்கு போரட வைக்கிது;

சிறிது நேரம் தவறினாலும்;
சினம் கொள்ள வைக்கிது;
சிடு சிடு என்றே சீறிப்பாய வைக்குது.

சிற்றுண்டியோ, பேறுண்டியோ;
வேலா வேலை உணவு கிடைக்கவில்லை என்றால்
வாட்டியே உடலை வருத்துது.

ஆகாரம் கிடைக்கவில்லை என்றால்,
ஆட்டம் காட்டுது.

ஒராயிரம் பண்டங்கள் பதார்த்தங்கள் இருந்தாலும்,
எதார்த்தமாக எடுத்து உண்ண முடியாத வயிறிது,
எல்லை மீறினால், அஜீரணத்தொல்லை கொடுக்கும்
இந்த வயிறிது.

விதி என்று நம்பி
வெறுத்து நிற்கும் கூட்டம்
வேண்டுவதெல்லாம்,
ஒரு சாண் வயிற்றுக்கு உணவு.


என்சாண் உடம்பில்,
எல்லா கலாட்டாவையும் செய்யிது,
ஒரு சாண் வயிறு.



ஒரு சாண் வயிறு,
ஒட்டியே ஏழ்மையைக்காட்டுது.

ஓயாமல் திண்பவன் வயிறு;
உப்பியே உருட்டுப்பானையாய்,
உருண்டு உருண்டு கொடுக்குது.

திறமை இருப்பவனை
தேடி சம்பாதித்து திண்று நிறப்ப வைக்கிது வயிறு;

திண்ணையில் உட்காந்திருக்கும் சோம்பேரியை
வெறும் வயிற்றோடு கிடத்துது ;


உழைப்பாளியை ஓடி ஓடி சம்பாதித்து
ஒருவாய் சோறு திண்ண வைக்குது.

திமிரு பிடித்தவனை திருடனாக்கி;
திருடி சம்பாதித்து தீணி திண்ண வைக்கிது,

ஏமாத்து புத்திக்காரனை,
பிறர் சொத்தை ஏப்பம் போட்டே,
எடுத்து உண்ண வைக்குது.

கொடுத்து பழகியவனை,
கொடையாளியாக்கி கூட்டாக உண்ணவைக்குது.

கெடுத்து பழகியவனை,
எடுத்தே திண்ண வைக்குது.


பசிக்கு அழுவும் குழந்தையை,
குவா குவா என்று கதறியே பசியால் படுத்தி பார்க்குது.

பாலாப்போன உடம்பு இது,
மூனுவேலை உணவு கேட்டே,
முடக்கிப்போடபார்க்குது.

அட இது ஒரு சாண்வயிறு,
ஒரு சாண்வயிறு
வயிற்றுப்பிழைப்புக்கு வழிதெரியாதவனை,
வாட்டியே வதைக்குது.

வெட்டிப்பேச்சி வீண்பேச்சி பேசுபவனையும்;
வேலா வேலைக்கு சோற்றைத் தேட வைக்கிது.

சாதி மத சண்டைபோட்டாலும்,
சாப்பாடு என்று வந்தஉடன்
சாதி சண்டைய மறந்துவிட்டு
கூப்பாடு போட வைக்கிது.

குடு குடு என்று ஓட விட்டே குட்டிக் கரணம் அடிக்கவைக்கிது
கடு கடு என்றே பேசி கடுப்படிக்க வைக்கிது
சிடு சிடு என்று முகத்தை வைத்து சிரிப்பைத்தான் மறைக்குது.

சாப்பாடு கிடைக்கவில்லையென்றால்;
சேட்டை செய்யிது;
சட்டையை கழற்றியே;
பிச்சை எடுக்கவும் துணியிது

பசியை வைத்து பகடைக்காய் நகத்துகிறது;
படித்தவனையும் பல்லக்காட்டி இழிக வைக்கிது.

சோம்பேரி என்றாலும்;
சோத்துக்கு சிங்கி அடிக்க வைக்கிது.
சொத்து வைத்திருப்பனை,
விற்றே திண்ணு தீர்க்க வைக்கிது.

வித விதமாக உணவைத் திண்றாலும்
விழுங்க முடியாது தவிக்க வைக்கிது.

ஒருசாண் வயிறை நிறப்ப
உணவுக்காக ஓடும் மானிட ஜென்மமிது
அடுத்த வேலை ஆகாரத்திற்காக
ஆட்டம் போட வைக்கிது.

அட ஒரு சாண் வயிறு உலகையே ஆட்டிப்படைக்கிது பாரு;
உன்னையும் என்னையும் பகைவனாக்கியே வேடிக்கை
காட்டுது.

அட
ஒரு சாண் வயிறு,
பசியைப்போக்க பாடாய் படுத்துவதைப் பாரு.

மூக்கு பிடிக்கத்திண்பவனையும்,
முடக்கிப்போட்டு பாக்குது;
மூனுவேலை திண்பவனை சம்சாரியாக்குது;
அட ஒருவேலை திண்ண வைத்து
சாமியாராக்குது;
அட பலவேலை திண்ணவைத்து,
திண்ணிப் பண்டாரமாக்குது.

வாயக்கட்டாதவனை வாட்டித்தான் பார்க்குது;
வைத்தியனிடம் போக வைத்தே;
பணத்தைத் தான் பறிக்கப் பார்க்கிறது.

வாயை பொத்தியவனை,
வறுத்தித்தான் பார்க்குது
வயதுவந்தவனை முடக்கித்தான் பார்க்குது.

ஆமா ஒருசாண் வயிறுயிது;
உண்ணாவிரதம் இருக்கவும் வைக்குது;
வேலா வேலை உணவு கிடைக்வில்லை யென்றால்;
விரட்டி விரட்டி அடிக்குது.


உந்தி உந்தி செல்லாமல் இருக்க;
முந்தி வரும் தொத்தியைக் குறையுங்கள்.

பந்திக்கு பித்தி சென்றே;
பக்குவமாய் பசி எடுத்து உண்ணுங்கள்.

பட்டிணிபோடாது,
பங்குபோட்டு உண்ணுங்கள்.

இந்த ஒரு சாண் வயிறு ;
உடம்பின் நடுவே கிடந்து,
உன்னையும் என்னையும் ஆட்டிப்படைக்கிது.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (13-Sep-21, 12:05 pm)
பார்வை : 57

மேலே