அன்னை ஏசி விட்டாள்
அன்னை ஏசி விட்டாள்
எனக்கு ஒரு வீடு
இல்லை என்றா?
காசு பணம்
சேர்க்கிறாய் நீ !
உன்னப் படைத்த
நான் தான்,
அவனையும்
படைத்தேன்,
பார் அங்கு ,
" உண்ண உணவில்லை
உடுத்த உடையில்லை
உறங்க இடமில்லை "
யாருக்கு வேணும்?,
உன் தங்க நகையும்
தங்கத் தேரும்,
எனக்கு வேண்டாம்,
உன் பாலும் பழமும்,
அவனிடமே
கொடுத்துவிடு,
அப்புறம் வா என்னிடம்,
இப்போ நீ இங்கிருந்து
போய்விடு,
என் கோபம்
தணிந்திடவே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.