சொல் சொல் பதில் சொல்

சொல் சொல் பதில் சொல்
தவறுக்கு பதில் சொல்
தவறாமல் பதில் சொல்;
தடுமாறமல் பதில் சொல்
தன்னலம் இன்றி பதில் சொல்;
சுற்றிவளைக்காது பதில் சொல்;
சொல் சொல் சுருங்கச் சொல்;
பிறர் மனதை காயபடுத்தாது பதில் சொல்;
மனதில் பதியுமாறு பதில் சொல்;
மண்டையில் ஓங்கி அடிப்பது போல் பதில் சொல்;
கேள்விக்கு பதில் சொல்;
கேலி செய்யாது பதில் சொல்;
கேட்ட கேள்விக்கு பதில் சொல்;
பாய்ந்து அடிப்பதை விட
பதிலில் வேண்டும் பதிலடி;
சொல் சொல் சொல்லும் பதிலை தெளிவாக சொல்;
பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்தால் தீராது பகை
கேள்விக்கு பதில் கேட்காமல் போனாலே முட்டாள் புரிந்துகொள்;
திரும்பி திரும்பி கேட்டால் வரும் ஒரே பதில்;
காலம் பேசாது கவலையும் கண்ணீர்தான் பேசும்;
காலம் பதில் சொல்லும் என்று இருந்தால்
கண்ணீர் தான் மிஞ்சும்;
நஞ்சை கக்காது பதில் சொல்;
வீம்புக்கு பதில் சொல்லாது விவரமாய் பதில் சொல்;
வம்பு தும்பு வராதபடி பார்த்து பதில் சொல் ; வஞ்சிக்காது பதில் சொல்;
வாஞ்சையுடன் பதில் சொல்;
சொல் சொல் உறக்க பதில் சொல்;
ஊர் அறிய பதில் சொல்;
உறங்கும்படி பதில் சொல்லாது;
ஒளராது பதில் சொல்;
உன்னால் முடியும் என்றே பதில் சொல்;
எரிமலையாய் வெ
a
எரிச்சலோடு பதில் சொல்லாது,
எடுத்தற்கெல்லாம் கோவப்படாது அன்பாய்; பதில் சொல்;
அதிகாரத்தோரணையைவிட்டு பதில் சொல்
நாகரீகமாய் பதில் சொல்;
நாசுக்காய் பதில் சொல்;
நல்ல வார்த்தையால் பதில் சொல்;
நன்கு வாழ்த்தியே பதில் சொல்;
நாளும் நலம் பெறவே பதில் சொல்;
பிடிவாதம் பிடிக்காது பதில் சொல்;
பிறரை வெறுக்காது பதில் சொல்;
கோகப்பாடாது பதில் சொல்;
கோழையாய் இல்லாது பதில் சொல்;
மனம் போன போக்கில் பதில் சொல்லாது
மனிதநேயத்துடன் பதில் சொல்;
பார்த்து பதில் சொல் இ பாதிக்காது பதில் சொல்
பகுத்தறிவோடு பதில் சொல்
பாடம் கற்பிக்க வேண்டும் என்று காழ்ப்புணர்ச்சியில் பதில் சொல்லாது,
கண்மூடித்தனமாய் பதில் சொல்லாது
கனிவுடன் பதில் சொல்;
சொற்களை சிதறவிடாதே;
ஒரு கல்போதும் ஒரு பறவையை வீழ்த்த;
ஒரு சொல்போதும் மனிதனை சாய்க்க;
எனவே சொல்லும் போது கவனித்து பதில் சொல்;
சொல் சொல் கவனமாய் சொல்;
சொல்லப் போனால் பொல்லாப்பு,
சொறியப் போனால் அரையாப்பு எனவே கவனத்தில் கொண்டு பதில் சொல்;
சொல்லாததை சொல்லி மனையாளிடம் பட்டபாடுபடாதே;
பொய்யை மறைக்க பொய்க்கு மேல் பொய் சொல்லாதே;
கொட்டிய சொல்லை அல்ல முடியாது;
எனவே கவனமாய் சொல்;
சொல் சொல் அளவாய் சொல்;
அளவில்லாது அடுக்கி அடுக்கி
அபத்தத்தை சொல்லாதே;
நெல்லைக் கொட்டினால் அள்ள முடியும்.
சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது;
வார்தைகளை கொட்டிய பிறகு வாரமுடியது ;
கடும் சொல் சொல்லாது கவனமாக பதில் சொல்;
சொல்லிச் செய்வார் சிறியோர்;
சொல்லாமற் செய்வார் பெரியோர்;
சொல்லியும் செய்வார் கயவர்;
சொல் சொல் சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு;
காலம் பதில் சொல்லும்
காய்ந்தே போகும் காயங்கள்;
ரணங்கள் எல்லாம் குணமடையும்;
காற்றில் அடித்து சென்ற குப்பையாய்,
நினைவுகளும் மறையும்;
பதில்களும் பழையதாகிவிடும்;
பழகி பழகி சொல்களும் சுரம் இழக்கும்;
காலமும் கடந்து போகும், கவலைகளும் மரத்து போகும்;
எனவே பதில் சொல்ல கற்றுக்கொள்;
பயப்படாமல் சொல்ல கற்றுக்கொள்;
பௌவியமாக பதில் சொல்ல கற்றுக்கொள்;
பிறர் நம்மை பைத்தியம் என்று சொல்லாதவடி பதில் சொல்ல கற்றுக்கொள்;
பயம் இல்லாமல் பதில் சொல்ல கற்றுக்கொள்;
பயனுள்ள பதிலை சொல்ல கற்றுக்கொள்;
நம்பிக்கையோடு பதில் சொல்ல கற்றுக்கொள்;
படுத்துறங்க பட்டு மெத்தை இருந்தாலும்,
தரையிலும் படுப்பேன் என்று சொல்வும் கற்றுக்கொள்;
என்னால் முடியும் என்று பதில் சொல்லக் கற்றுக்கொள்;
படுதோல்வியை சந்தித்தாலும் பயப்படாது பதில் சொல்ல கற்றுக்கொள்;
பதில் சொல்லத்தெரியாவிட்டாலும்
உளறி கொட்டாது இருக்க கற்றுக் கொள்;
பதில் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல;
பதில் சொன்னவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல;
எனவே, பதில் சொல்ல பழகு, பதில் சொல்ல பழகு;
தைரியமாய் பதில் சொல்ல பழகு;
அதுவே மனிதனுக்கு அழகு.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Mar-23, 11:21 am)
பார்வை : 54

மேலே