அமைதி பெறு என் மனமே, என் மனமே

அமைதி பெறு என் மனமே, என் மனமே;
அன்பாய் பழகி, அமைதி பெறு என் மனமே; என் மனமே;
கலங்காதே மனித மனமே கலங்காதே; கண்ணீரின் வாழ்க்கை உன்னுள் அடைக்களம்;
கதைகள் பேசும் ஆயிரம் நினைவுகளும்;
நிழலும் சுடும்; உறவுகளும் சுடும்;
நீ சுமக்கும் நினைவுகளும் சுடும் ; கலங்காதே மனமே;
காயப்பட்ட இதயமும் சுடும்;
கையில் ஏந்திய குளிர் நீரும் சுடும் ; கலங்காதே மனமே;
பாசமும் சுடும், பசியும் விடும் கலங்காதே மனமே;
பாவங்கள் நிறைந்த மனமே மனமே;
பாதை மாறிப் போகும் மனமே மனமே;
கவலைகளை மறந்து போ, என் மனமே;
மலையாய் கவலைகள் குவிந்தாலும்,
மலைக்காது மனதை ஊனமாக்காதே;
மறந்து போ என் மனமே; மறந்து போ; கவலைகளை கடந்து போ மனமே;
உடைந்து போனாலும் சிதைந்து போகாதே;
உறுவாக்க விரைந்து போ; விரும்பியே போராடு மனமே;
தினம் தினம் பல கவலைகள் தொடும், தொடரும்
கண்ணீர் வடிக்கும், கதைகள் ஆயிரம் சொல்லும்
கவலைப்படாதே மனமே, கதறி அழாதே
காற்று அடித்துச் செல்லும் தூ சியாய் பறந்தோடும்
நீ நிதானம் இழக்காதே மனமே;
கவலைகள் நெருங்கியே வந்து அணைக்கும் வதைக்கும் கவலைப்படாதே;
துன்பம் வரினும் துடைத்தே போட்டு மறந்து நடந்து போ என் மனமே;
துயரம் துரத்தி துரதத்தி வந்து துடி துடிக்க வைத்தாலும் மனம் உடைந்து போகாது மறந்துபோ என் மனமே
கடந்தகாலத்தை கடந்து , நிகழ்காலத்தை மறந்து, எதிர்காலத்தை துறத்தி போ மனமோ;
கடல் மீது கல்லை எறிந்தால் கடலுக்கு வலிப்தில்லை;
உடல் மீது கல்லை எறிந்த வலியை விட
உள்ளத்தில் அடிபடும் வலி உடைத்து விடும் உன்னையே;
மனமே அன்பை அன்பால் அடைய அன்பாய் தூதுபோ மனமே;
அமைதி கொள், என் மனமே அமைதி கொள்;
சோகம் என்றும் சுமைதான் , சோகத்தை சுமந்தால் அதோ கதிதான்; அந்தோ பரிதாபம் தான்;
எனவே சோகத்தை மறந்து, சிறு சிறு சுகத்தையும் ரசித்து அமைதி கொள் என் மனமே அமைதி கொள்;
பிடிவாதம் ஒரு தொத்து வியாதி பிடித்து விட்டாலோ படு தோல்வி;
பிடிவாத்ததை விட்டு பிடிப்புடன் வாழ அமைதி பெறு என் மனமே ;
மனமே பொறாமையில் பிறக்கும் போட்டி;
புகைத்தே உன்னை வாட்டும் இந்த போட்டி;
புதைந்து போகாது இருக்க பொறுமையை எடு, பொறாமையை கைவிடு;
புரிததில் உண்டு நன்மை;
பொறுமை ஒருபோதும் தோற்றதில்லை ;
பொறாமை ஒரு போதும் ஜெயித்ததில்லை மனமே;
புதரில் உண்டு பாம்பு;
உன் மனப் புதரில் உண்டு வீம்பு;
புரிதலில் உண்டு வாழ்வு;
புரிந்து நடந்தால் உண்டு தெம்பு;
புரியாவிட்டால் உண்டு வம்பு;
எனவே தெளிவு பெறு மனமே ; தெளிவு பெறு மனமே;
பொறுமை ஒருபோதும் தோற்றதில்லை ; பொறாமை ஒரு போதும் ஜெயித்ததில்லை மனமே; இதை புரிந்து கொண்டால், வாழ்வில் உண்டு நிம்மதி;
புகைந்திடாது பொறுமையை கடைபிடிக்க அமைதி பெறு என் மனமே;
முதுகுக்கு முன்னால் பேசுபவர்களையும் முகத்துக்கு முன்னால் முகம் கொடுத்து பேசாதவர்களையும் நம்பாதே மனமே ;நம்பாதே ;
உன்னை கடிந்து மறந்து செல்பவர்களை,
கடந்து செல்லும் மேகமாய் மறந்து போ என் மனமே, மறந்து போ;
எதிரியிடம் பழகினாலும்
எதிலும் ஆதாயம் தேடும் காரியவாதியிடம் கவனமாய் பழகு மனமே; கவனமாக பழகு மனமே;
பொக்கிசமாய் நினைவுகளை சேர்த்து வைப்பதை விட்டு, புதைகுழியாய் நினைவுகளை சவக்குழியாக்காது இரு மனமே;
சவக்குழியாக்காது இரு மனமே;
பொய்யும் புறட்டும் நிறைந்த உலகில்;
பொய் பேசி பொய்யாய் போலி வாழ்க்கை வாழாது இரு மனமே;
சத்தியம் என்பது, பத்தியம் தான் மனமே;
பவித்திரமாக வாழ சத்திய சீலனாய் இரு மனமே;
சகதியை பூசிவிட்டு சந்தனம் தான் என்று கூறாது இரு மனமே;
எடுத்ததற்கெல்லாம் குறை கூறும் எடக்கு மடக்கு காரரிடம்,
எட்டியே நின்று பழகு மனமே; எட்டியே நின்று பழகு மனமே;
தவறை மறந்து போ, நினைவே மறந்து போ;
பொய்யான உறவை மறந்து போ மனமே;
போக்கத்தவன் செயலை மறந்து போ;
உதிரும் பாசத்தை உதறிபோ என் மனமே;
உயரிய பாசத்தில் உருகி போ மனமே;
உறவாடியவன் செய்த தவறுகளை மறந்து போ என்மனமே;
போதும் போதும் மனதுக்குள் அடைத்து வைத்து
குமுறுவதும்;
சோகம் சொட்டி கண்ணீறாய் வடியுமுன்,
சோகத்தை மறந்து போ , என் மனமே;
இறந்தவர்கள் மீண்டும் எழுந்து வரப்போவதில்லை;
இருப்பவர்கள் எல்லாம் முடிவை பார்க்கப்போவதில்லை மனமே;
நினைவுகள் சுமக்கும் சோகத்தை மறந்து போ என் மனமே;
இழைத்த கொடுமையை மனதுக்குள் வைத்து சுமந்து கொதிக்காது
மறந்து போ என்மனமே ;மறந்து போ;
அமைதியில்லா என்மனமே என்மனமே
அலைபாய்ந்தே திரியும் என்மனமே;
அமைதி பெறுவாய் என் மனமே;
அவமானம் தன்னை சுமந்தாலும் ,
அனுதினமே மறந்து; அமைதிபெறு என் மனமே என்மனமே;
போறாத காலத்தில் வந்த கவலைகளை மனதில் வைக்காது, மறந்து போ, என் மனமே என்மனமே;
ஆறாத இதய காயத்தை ஆற்றும்,
காலம் என்னும் நன்மருந்து என் மனமே என் மனமே;
துன்பம் நேரினும் மலைக்காது தாங்காது துடிக்காது தவிக்காது இருப்பின்
தூவும் பனிபோல் துக்கமும் துயரமும்
நொடியில் மறையும் நம்பிக்கை என்ற இதய சூரியன் உதிக்கும் போது என்மனமே
ஆழியாய் ஊழியாய் கவலையில் மிதக்காது,
கலனாய் நலனாய் வாழ்க்கை கடலில் மிதந்திடு என்மனமே என்மனமே;

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Mar-23, 11:08 am)
பார்வை : 834

மேலே