ஆண்டவனுக்கே

ஆண்டவனுக்கே...
🌹🌹🌹
அந்த காலத்திலே ஓர்
ஆண்டவன் இருந்தாராம்!

அவரது தோட்டத்தின்
நன்மைதீமை அறியும் மரத்தின்
கனியை புசிக்கக் கூடாதெனக்
கட்டளை இட்டாராம் !

அரவத்தின் அறிவுரைப்படி
அம் மரத்துக்
கனி ஒன்றைப் பறித்துப் புசித்த பெண்
அது சுவையானதானதால்
தன்
கணவனுக்கும் கொடுக்க
அவனும் புசித்து மகிழ்கிறான்.

ஆத்திரம் கொண்ட
ஆண்டவன்

அந்த ஒற்றைக் கனியைப்
பறித்தமைக்கே

சாகுமாறு சாபம் இடுகிறார்!

பாவம் அவர் !

மக்களைப் பெற்ற மனிதர்கள்

கோடானு கோடி பழங்களைப்
பறித்துப் பறித்து தின்று
பசியாறுகிறார்கள்!!

திகைத்துத் தடுமாறுகிறார் ஆண்டவன்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (17-Mar-23, 8:46 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 182

மேலே