மனமே மனமே

மனமே மனமே
ஜெயம் உண்டு ஜெயம் உண்டு,
பயம் ஏன் மனமே;
செயல் ஒன்று ஜெயம் உண்டு,
பயம் இல்லை மனமே;
சொல் ஒன்று செயலொன்று
வேண்டாம் மனமே.

ஜெகம் உண்டு ஜனம் உண்டு,
பயம் இல்லை மனமே;
செல் என்று செல் என்று கால்கள் சொன்னாலும்,
சற்றே கவனம் வேண்டும் மனமே.
சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை,
கவனம்கொள் மனமே.

அய்யம் என்றும் வெற்றி தருவதில்லை மனமே;
ஐம்புலனை அடக்கியவன் வீழ்ந்ததில்லை;
அன்பே உலகின் உயிர் நாடி மனமே;
எனவே,
அன்பு என்றென்றும், நிறந்தறமாக
நிலைக்க வேண்டும் மனமே.

நற்பண்பும் பணிவும் இருந்தால்,
நல்லோர் ஆவது உறுதி, மனமே.
நாற்திசையும் உனக்கடிமை மனமே;

வல்லோர்களையும் வீழ்த்த,
வள்ளலாகி விடு மனமே.

வாழ்வுண்டு, நோவுண்டு, சாவுண்டு,
பயம் ஏன் மனமே.

பணிவு உண்டு, பயன் உண்டு,
பக்குவப்படு மனமே.

மெய்யான பொய்யான உடலில்,
போய்வரும் காற்று,
பொசுக்கென்று நிற்பதற்குள்,
அருளான ஒளியில்
ஆன்மீகத்தைத்தேடு மனமே.

அன்றாடம் பசியும், பட்டிணியும்,
பிணியும், நோயும், சாவும்,
பிசின் போல் ஒட்டிவரும்,
பிடிவாதம் வேண்டாம் மனமே.

நினைவுண்டு, நனைக்கும் சோகம் உண்டு;
நடந்திடு மனமே ;
நிலையற்ற வாழ்க்கை இது.
நான்(,) தான் என்ற
அகந்தை ஏன் மனமே.


அநீதியை நீதியாக்காதே;
அநியாயத்தை நியாயப்படுத்தாதே;
அநாதையாகிவிடுவாய் மனமே.


மாயைக்குள் விழுந்து,
மல்லாடுவதைவிட,
மனதுக்குள் பேசிவிடு;
மனந்திறந்து பேசிடு மனமே.

புத்தியும், சித்தியும், பக்தியில் பிறப்பதைவிட
பணிவில் பிறந்திடும் மனமே.

ஆசையெனும் போதையில்,
அணுவில் அணுவானாய்;
அணுக்களின் சேர்க்கையால் வித்தானாய்;
வித்திலே கருவானாய், உருவானாய்;
வித்திட்ட நீ,
வினைப்பயனுக்குள் விழுந்தாய்;
விதைத்திட்ட பாவத்தை,
விணைச்செயலால், விளக்கிவிட முடியாது; தவித்தாய்
விதிமீது உன் இயலாமையை சுமத்தினாய்;
சுமையென்ற வாழ்க்கையில்,
சுகம்தான் பெரிதென்று நில்லாது,
சுடர்விடும் ஜோதியாம் உன்மனதை,
தூய்மையாக்கு மனமே.

உடல் ஒன்று, உயிர் ஒன்று,
உனக்குள் ஏன் போராட்டம் மனமே.
விணா உண்டு, விடை உண்டு,
விணாவிட தடை ஏன் மனமே.

ஜனனம் உண்டு மரணம் உண்டு;
ஜெய்ப்பவன் தோற்பதுண்டு;
தோற்ப்பவன் ஜெய்ப்பதுண்டு;
சனநேரத்தில் எல்லாம் மாறுவதுண்டு;
சிகிப்பவன் சாதிப்பதுண்டு;
சண்டாலனும் சரிவதுண்டு;
சமாதானம் கொள் மனமே.

புயம் உண்டு புத்தியுண்டு;
புறப்பட்டு செல் மனமே.

சதி உண்டு, மதி கொண்டு;
வெல்மனமே.

பழிக்குத் துணை போனாலும்;
இறுதி வழித்துணைக்கு யாரும் வருவதில்லை,
மனமே.

பழிபாவம் பயந்தோடுவதில்லை;
பயணிக்கும் உன்மீதுதான்
பழிபாவன் தொத்திடும்;
பாவம் செய்வதை விடு மனமே.

பசியை மறந்தவனுக்கு புசியை கொடு மனமே;
புசிக்க இல்லாத வனுக்கு
பசியை தீர்த்துவை மனமே.



பிடிமண்தான் வேதாந்தம்;
பிடியை பிடிவாதமாய்; பிடிக்காது;
வாழ்க்கையைப் படிமனமே.


ஆசை உண்டு, பேராசை கொண்டு; அழியாதே மனமே

நொடிக்கு நொடி சாவு;
சொந்தது போதும்;
வீணாய் குழப்பம் எதற்கு,
தர்க்கத்தையும், தடுமாற்றத்தையும், விடுமனமே;
தவறுக்கு உண்டு, தண்டனை,
தவறி விழுந்தவனுக்கும் உண்டு நிந்தனை

விடைதேடு மனமே; விடைதேடு;
அச்சம் மிச்சமாகவேண்டாம்;
துச்சமாய் அச்சத்தை விரட்டிடு மனமே.


விடை கொடு மனமே;
விடை கொடு,
உன் இதயம் கரைந்தது போதும்;
விடைகொடு மனமே;
கரையட்டும் கள்ளமனம்;
உறையட்டும் நல்ல உள்ளம்;
உடையட்டும் கொடியமனம்.
மறையட்டும் குரோதம்.

எடைபோடும் வேதனைக்கு
விடைதேடு மனமே;
மடை என துயரங்கள் வந்தாலும்;
விடைகொடு மனமே.

விடை கொடு! மனமே விடை கொடு!
கோபத்திற்கும் குரோதத்திற்கும் விடைகொடு மனமே.

கண்ணின்பாசம்
கருணை இருக்கும் வரைதான்;
கண்ணீரின் பாசம் வழியிம் வரைதான்
கணக்கும் இதயத்தின் பாசம்
சுமக்கும் வரைதான்;
சுமக்கும் சுமையின்
பாசம் இறக்கி வைக்கும் வரைதான்;
சுத்திவரும் உன் உடலின் பாரம்;
உயிர் விட்டுப் பிரியும் வரைதான்;
விடைகொடு மனமே விடைகொடு.

விழுந்து அழுதாலும்;
தொட்டுத் தழுவினாலும்;
விட்டுப்போன உயிர் திரும்பி வருவதில்லை;
விடைகொடு மனமே; விடைகொடு மனமே;

தனிமையும் காயமாய் வலிக்கும்;
தடுமாற்றமும் சாயமாய் வெழுக்கும்;
தள்ளி நின்றால் இனிமையும் வாட்டும்;
விடைகொடு மனமே; விடைகொடு.

உடமையெல்லாம் உன்னுடன் வருவதில்லை ;
உடலோடு உயிர் நிலைத்திருப்பதில்லை;
உறவாடும் உறவும், உடன்படுவதில்லை;
விடைகொடு மனமே; விடைகொடு.

உடையும்,
எடை கூடியோ, குறைந்துவிட்டால்,
ஒவ்வாது போவதுண்டு;
உடைந்த உள்ளத்தை, ஒட்டினாலும்,
வெட்டியது வெட்டியதுதான்;
ஒருகனம் சொட்டட்டும் சோகம்;
சுமையும் இதயத்திலிருந்து குறையட்டும் மனமே.


உடைந்த பாத்திரம் போல்,
உறவில் விரிசல் விழுவதுண்டு;
உண்மை அன்பிலும் சந்தேகம் வருவதுண்டு;
விடைகொடு மனமே; விடைகொடு.


நெருப்பு நெருங்கியவனை அணைப்பதுண்டு;
அதே நெருப்பு நீரினால் அணைவதுண்டு;
வெறுப்பு பலரை அழிப்பதுண்டு;
பொறுப்பை ஏற்றவன் அழைப்பதுண்டு;
உழைப்பை நம்பியவன் வென்றதுண்டு;
விடைகொடு மனமே; விடைகொடு.

அகந்தை வேண்டாம்,
அகத்தைத்தேடு;
புறமெனும் போர்வைக்குள்,
அறிவைப் புதைக்காதே;
புறத்திற்குள் புகுந்து,
அமைதியெனும், புதையலைத்தேடு;
அகத்தில் புறமெனும் கழிவை அகற்றி;
ஆன்மீகத்தேடலை நாடு.

விடைகொடு மனமே; விடைகொடு;
நடைபோடும் உலகில், நல்லவரும்,
தீயவரும் நிறம்பிக்கிடப்பதுண்டு;
விடைகொடு மனமே; விடைகொடு.

விருந்துண்ண நோய்கள் தொடரும்;
மருந்துண்ண நோய்கள் தீரும்;
மருந்தாய் விருந்துண்ண நோவு தீரும்;
விருந்தாய் மருந்துண்ண சாவு தொடரும்;
எனவே விடைகொடு மனமே விடைகொடு.


தீறாத நோய்;
மன உளைச்சல்தான்
எனவே;
மனமெனும் கேணியில் மாசுபடியவேண்டாம்;
பேயாய் ஆட்டும் பேராசையை விட்டு;
பிறப்பருக்க பிறர்க்கு நன்மை பயத்து;
பேனாய் கடிக்காது;
தேனாய் இனித்து;
நன்மை பயத்திடு.

புதையலை பூதம் காற்பது போல்;
உன் பெயரும் புகழுக்காக, பூதமாய் மாறாது;
புரிந்து நடந்து கொள் மனமே; புரிந்தே நடந்து கொள்.

விடைகொடு மனமே; விடைகொடு;
விட்டுபிரியமாட்டேன் நான்;
விழும் வரை என்னுடன் நீ இருக்க;
விரும்பியே விடைகொடு கொடூறத்திற்கு.


கைமாறு செய்ய கடன்படு;
கண்மூடித்தனமாய் செயல்படாது;
கடமையாற்று.
கன்றைத்தேடி வரும் பசுவாய்,
கருணைகாட்டு.

உள்ளமே கோவில்;
உன் நல் எண்ணமே தெய்வம்;
உள்ளேன் உள்ளேன் என்று,
உன் ஆத்மாவுக்கு உயிர்கொடு;
உமிழும் எச்சாய் வாழாது;
உதிரியும் மலராய் வாடாது;
உதவும் கரமாய் இருந்திடு.

மனமே! மனமே!
விண்ணுக்கும், மண்ணுக்கும், உறவென்ன;
விழுந்தே கொடுக்கும்.
மழைக்கும் பயிர்க்கும் உறவென்ன;
இரவைத் தொடர்ந்து வரும்
பகலுக்கு உறவென்ன;
உறவைத் தொடரும், பாசத்திற்கும்,
உறவாடும் பாசத்திற்கும் பொருள் எண்ண;
வளிக்கும் ஒளிக்கும் உறவென்ன;
பசிக்கும் பட்டிணிக்கும் உறவென்ன;
இன்ப துன்பத்திற்கிடையே உறவென்ன;
உடலுக்கும் உயிருக்கும் உறவென்ன;
என்ன என்ன என்று, கணக்குபோட்டு எண்ணுவதற்குள்,
எடுத்த யாக்கை முடிவுக்கு வந்துவிடும்,
எனவே, விடைகொடு, மனமே விடைகொடு.

விருப்பு வெறுப்புக்கு, விடைகொடு மனமே;
விடைகொடு;
நடைபோடு மனமே, நடைபோடு;
நலம் பயக்க, நல்லது நிகழ;
நால்வருக்கு உதவிடு மனமே உதவிடு.

விடைகொடு மனமே; விடைகொடு.

கலங்கியது போதும் மனமே;
கள்ளான மனம் வேண்டாம்;
கடுகளவும் வேசம் வேண்டாம்;
கனவே வாழ்வாய் வாழ வேண்டாம்;
கடமை செய்யாத, சண்டாலனாய் இருக்கவேண்டாம்;
புழுவாய், புல்லாய், பூண்டாய், வந்த ஜீவனுக்கு
புரிந்தும், புரியாமலும், அறிந்தும், அறியாமலும், பாவம் செய்ய வேண்டாம் மனமே.
குரங்கு வால் கொள்ளிக்கட்டையாக வேண்டாம்;
குறைக்காத நாயாகவேண்டாம்;
குறையுள்ள மனிதனானாலும்,
குற்றத்தை நினைக்காமல், இருக்கவேண்டாம்.

ஆத்திரம் உன்னை மறைக்கும்,
சாத்திரம் உன்னை மறக்கவைக்கும்,
கற்றவன் பழிக்கு அஞ்சுவான்;
கல்லாதவன் சொல்லுக்கு அஞ்சுவான்;
உற்றவன் உயிருக்கு அஞ்சுவான்;
பெற்றவள் பாசத்திற்கு அஞ்சுவாள்;
சோம்பேரி உழைக்க அஞ்சுவான்;
உடையவன் உடைமைகளை பாதுகாக்க அஞ்சுவான்;
உள்ளத்தில் கிளிபிடித்தவன், எதற்கும் அஞ்சுவான்.
உதவாக்கறை பிழைக்க அஞ்சுவான்;
உண்மையானவன் பழிக்கு அஞ்சுவான்;
இருலுக்கு பயந்தவன், துணைதேடுவான்;
இருப்பவன் பொருளை காத்துக்கொள்ள அஞ்சுவான்;
இல்லாதவன் திருட அஞ்சுவான் ;
சொல்லாதவன் உண்மைக்கு அஞ்சுவான்;

உறுதிகொள் மனமே உறுதி கொள்;
இறுதியாக சொல் கின்றேன்
உறுதிகொள் மனமே.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (2-Dec-21, 9:11 pm)
பார்வை : 379

மேலே