ஓகோகோ மனிதர்களே

ஓகோகோ மனிதர்களே ஓடி ஓடித் திரிவதேன்;
கூடிகூடி வாழ்ந்திடவே
குறை கூறுவதை விட்டுவிடுங்கள்.

ஓகோகோ மனிதர்களே ஒருமுறை கேளுங்கள்;
ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் வாழந்திடுங்கள்;
ஓலம் விடுவதை விட்டு
ஒற்றுமையாய் வாழ்ந்திடுங்கள்;
பொய்யைவிட்டு உண்மையை நிலைநாட்ட வந்திடுங்கள்;
ஓகோகோ

பதுங்கிடும் மனிதனிடம்
பயன் தேட முடியாது;
பாய்திடும் மனிதனிடம்
பன்பை தேட முடியாது;
பாதை அறியாத கால்கள் வீடு வந்து சேராது.
பாம்பிடம் இரக்கம் காட்ட முடியாது.
ஓகோகோ மனிதர்களே
வாழ்வை ஓட்டப்பந்தயமாக்கு வதை நிறுத்துங்கள்.

வாழத்தெரியாது,
உண்மையை பொய்யாக்கி;
பொய்யை மெய்யாக்கி;
வாழத்துடிப்பதைவிட்டு விடுங்கள்;

அன்பு இல்லாத இல்ல(ர)த்தில்
அமைதியிருக்காது;
மனிதப்பன்பு இல்லாதவனிடம்,
அன்பு அடைக்கலம் புகாது.

அறிவை இழந்தவனிடம்;
அறம் தர்மம் நிற்காது;
ஆணவம் பிடித்தவனிடம்
அமைதி குடிகொண்டு இருக்காது.

ஓகோகோ மனிதர்களே
ஒருசொல் கேளுங்கள்;
அறிவைப் பெருக்கி,
அகந்தையை நிறப்பியவன், வாழ்கையில்
நிம்மதியாய் இருப்பதில்லை.

கடமையை மறந்து,
கடனை சுமக்கும் மனிதனிடம்,
சுதந்திரம் இருக்காது.

உடமைக்கு போராடும் மனிதனிடம்,
உறுக்கமும் இறக்கமும் இருக்காது.
உயிருக்கு போராடுபவனிடம்
உறவுமுறை எடுபடாது.

ஓகோகோ மனிதர்களே;
உண்மையைக்கேளுங்கள்,
உண்மைகள் பொய்கள் என்னவென்று
தெரிந்தே ஒருவரை ஒருவர் சாடுங்கள்.

நடைகட்டும் கூட்டம், நெறிகெட்டெ கூட்டம், நரியைப்போன்று ஊழைவிட்டே ஓடும்.
நல்லது கெட்டது தெரியாதவனிடம்,
நலம் விசாரிப்பது தவறு .

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று
நிறம்பிய உலகில்:
அடிமைத்தனமும் கொடுமையும் நிகழாமல் இருக்காது.

ஆண்டியாய் இருப்பவனும்; அரசனாகளாம் ஒரு நாள்.

அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒரே நீதி என்றால் பிறந்துவிடும் சமத்துவம்.

அழகிய மனதில் அழுகிய சிந்தனை;
அசிங்கத்தைப் பூசாமல் விடாது.
பழகிய மனிதனை பழிவாங்கத்துடிப்பவனை,
பாவம் சும்மாவிடாது.
காசு பணத்துக்கு அடிமையானவனிடம்,
கௌரவத்தை தேட முடியாது.

கனிவான உறவை கடைச்சரக்காக நினைத்தால்,
கருணைபிறக்காது.

ஓகோகோ மனிதர்களே ஓடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்;
பள்ளிக்கூடம் போய் படித்தாலும்,
வாழ்க்கைப்பாடம் கிடைக்காது.
பசி எடுத்தவனிடம் பக்தியை புகட்டினால் புத்தியில் ஏறாது.
பைத்தியக்காரனிடம் பயத்தைக்காட்டினால் பயன் ஒன்றும் கிடையாது.

அறிவியல் உலகில்,
அசிங்கத்தை பூசி,
அவமாணத்தை வாங்கக் கூடாது.

உளறிடும் மனிதனிடம் உண்மை உறங்காது;
குளறுபடி செய்பவன் செயல்களில்
சுத்தம் இருக்காது.

ஓகோகோ மனிதர்களே;
உறங்குவது போல் நாடகம் ஆடுபவனை எழுப்பமுடியாது.

தூக்கத்தில் கிடந்து தவிப்பனை விட்டு துக்கம் ஓடாது.
துரு துரு என்று இருப்பவன், கால்கள் தரையில் நிலையாய் நிற்காது.
திரு திரு என்று முழிப்பவன்;
திருடனாக இருக்க முடியாது;
திரும்பிப் பார்க்காதவன் வாழ்வில்
திருப்பம் நேரது.

ஓகோகோ மனிதர்களே
அழகிய மாடமும் தீய்க்கு இரையாகாமால் இருக்காது.
அழகாய் இருக்கு என்று, அரளிக்காயை தின்ன முடியாது.

ஓகோகோ மனிதர்களே
உண்மையைக்கேளுங்கள்;
விளம்பரத்தை தேடி ஓடுபவனிடம்,
விருப்பு வெறுப்பு கேட்கக் கூடாது;
விளைச்சல் இல்லா நிலத்தில்,
விதையை நட்டு விவசாயம் பன்ன நினைக்காதீர்.

ஓகோகோ மனிதர்களே ஒருசொல் கேளுங்கள்;
உதவாக்கறை என்று ஒதுக்கி, ஒதுக்கி வைப்பவனிடமும் உயரிய கருத்து கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

உதைக்கும் பந்தாய் உதைத்துக் கொண்டிருந்தால், உன்னையே வந்து ஒருநாள் எத்தும் என்பனை மறக்கக்கூடாது.
கண்ணை மூடிக்கொண்டிருந்தால் உலகம் இருண்டு விட்டது என்று நினைக்கக்கூடாது.

பாசை தெரியாதவனை பைத்தியம் என்று கூறக்கூடாது;
சீரிவரும் பாம்பிடம் சிரித்து பழகமுடியாது.
சிரித்து பழகுபவனிடமும்,
கொடூரம் குடிகொண்டிருக்கும்.

சினம் கொண்டவனிடம்
சிரிப்பை வரவைக்க முடியாது;
சீரிப்பாயும் புலியை,
சீப்பு போட்டு சீவி விட முடியாது. சிலைபோல் நிற்பவனிடம்,
சிறிதளவும் கருணை எதிர்பார்க்க முடியாது.

ஓகோ மனிதர்களே ஓடுவதெங்கே கூறுங்கள்;
உலகை மாற்ற புறப்படும் முன்
உன்னை திருத்தி வாழுங்கள்.
A. MUTHUVEZHAPPAN

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-Sep-21, 9:00 pm)
பார்வை : 84

மேலே