வாழ்க்கை கோலம்

மனிதனின் வாழ்க்கை
ஒரு புள்ளியில் தொடங்கி
இன்னொரு புள்ளியில்
முற்று பெறுகிறது...!!

இடையில் வரும்
புள்ளிகள் எல்லாம்
காற்புள்ளி என்றும்
அரைப்புள்ளி என்றும்
முக்கால் புள்ளி என்றும்
முடிவில்
முற்றுப்புள்ளி பெற்று
முடிந்து விடுகிறது ..!!

புள்ளிகளை சரியாக வைத்து
கோலம் போட்டால்
கோலம் அழகாக இருக்கும்
வீட்டின் அழகும் கூடும் ...!!

அதுபோல்தான்
வாழ்க்கை அழகாக இருக்க
புள்ளிகளை வைக்க
வேண்டிய இடத்தில
சரியாக வைத்து
"வாழ்க்கை கோலத்தை"
போட வேண்டும்
இல்லையென்றால்
நம் வாழ்க்கை
அலங்கோலமாகி விடும் ...!!

வாழ்க்கையில்
உயர்வு என்பதும்
தாழ்வு என்பதும்
நம் கையில் தான் என்பதை
உணர்ந்து நம்பிக்கையோடு
கோலம் போட்டு வாழ்வோம் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Sep-21, 8:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai kolam
பார்வை : 159

மேலே