பேரழகியாய் மாறி விடுவாய்
ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியில்
உன் அழகை பார்த்து பார்த்து
உனக்கு என்ன மாற்றம் வந்து விட போகிறது !
ரசாயன கலப்பே இல்லாத
என் கவிதைகளை வாசித்து விட்டு போ !
உன் அழகின் பெருமையெல்லாம்
வாசித்து வாசித்தே !
"பேரழகியாய் " மாறி விடுவாய் !