புணர்ச்சி விதி

உன்னை
பார்த்ததும் பதறி
"மச்சி உன் ஆளுடா"
நாளைக்கு பாக்கலாம்..
நண்பர்கள் விலகி ஓட.,

விரைந்து வந்த
நீ உன்னையே
என் மேல் வீசி எறிகிறாய்..

பள்ளி நாட்களில்
பைத்தியம் பிடிக்க வைத்த
புணர்ச்சி விதிகள்
பத்து நொடிகளில்
புரிந்து விட்டது..!?

"உயிர் வரின் உக்குறள்
மெய் விட்டோடும்"

"உடல் மேல் உயிர் வந்து
ஒட்டுவது இயல்பே"..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (4-Jul-17, 9:45 pm)
Tanglish : punarchi vidhi
பார்வை : 407

மேலே