நிரூபணம்

நடு நிசி.
கும்மிருட்டு...
வானத்தில் சில நட்சத்திரங்கள் மட்டும் கண் சிமிட்டின...
நிலவுக்கு அன்று ஓய்வு.
மரங்களும் செடிகளும் துளியும் அசையவில்லை...
எல்லா உயிரினங்களும் உறக்கத்தில்..
குறட்டை சத்தம் கூட இல்லை..
கொசுக்களும் ரீங்கரிக்காமல் அமைதி விரும்பினர்...

அமைதி, பேரமைதி, நிசப்தம்...
எங்கும் ஒரு துளி சத்தம் இல்லை...

உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அந்த முதியவர் காது கேட்கும் கருவியை அணிந்து கொண்டார்...

அமைதி, பேரமைதி, நிசப்தம்...
எங்கும் ஒரு துளி சத்தம் இல்லை...

-----முரளி

எழுதியவர் : Murali TN (24-Aug-19, 11:07 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 138

மேலே