ரேனுஸ்ரீ -பகுதி 14

எங்கள் வகுப்பில் உள்ள சிலர் அவர்களின் சகோதர,சகோதரிகள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுத இருப்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்,அப்போது எனக்கு ஸ்ரீயின் நியாபகம் வந்தது,ஸ்ரீயும் இப்போது 10ஆம் வகுப்பு அல்லவா என்று நினைத்தபடி அவனுக்கும்,12 ஆம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் என் அண்ணனுக்கும் மனதினுள் வாழ்த்தினை தெரிவித்தேன்.
அப்போது பவித்ரா என்னிடம் "ஹே ரேணு,உன்கிட்ட ரெண்டு பென் இருக்கா"என்று கேட்டால்.
"ம்ம்..இருக்கு,வேணுமா"என்றேன்.
"ம்..குடு எழுதிட்டு தர"என்றால்.
"எடுத்துக்கோ"என்று கூறி பென்னை கொடுத்தேன்.
அன்று மாலை பவித்ரா என்னிடம்"தங்க்யு(thank you )ரேணு "என்று கூறி என் பென்னை கொடுத்தால்.
புன்னகித்தபடி வாங்கிக்கொண்டேன்.
"உனக்கு தெரியுமா!,ஸ்ரீ அண்ணா 10th எக்ஸாம் முடுஞ்சது ஊற விட்டு போறாரா"என்று கூறினால்.
அவள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் வாயடைத்து அமர்ந்திருந்தேன்.
"டியூஷன்ல சொல்லிட்டு இருந்தாரு,எங்க எல்லாருக்கு கஷ்டமா ஆயிடுச்சு"என்று கவலையுடன் கூறிக்கொண்டிருந்தால்.
"'எந்த ஊருக்கு போறாரு?"என்று கேட்டேன்.
"அவரோட சொந்த ஊருக்கு போறதா சொன்னாரு,ஊரு பெரு ஏதோ சொன்னாரே,ம்ம்..,ச்ச மறந்துட்ட"என்றால்.
"பரவா இல்லை விடு"என்றேன்.
"10th எக்ஸாம் வர்றதால இந்த வாரத்துக்கு அப்ரோ டியூஷனுக்கு வரமாட்டாரு,நா அவர ரொம்ப மிஸ் பண்ணுவ"என்று கூறிக்கொண்டிருந்தால்.
"ஆச்சு நா வர"என்று கூறி வீட்டிற்கு கிளம்பினேன்.

ஸ்ரீ ஊரை விட்டு போகிறான் என்று கேள்விபட்டதில் இருந்து என்னால் எதிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை,என்னால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை,ஸ்ரீயை பார்க்க முடியவில்லை என்றாலும் ஒரே ஊரில் இருக்கிறோம் என்ற திருப்தியாவது இருந்தது இனி அதுவும் இல்லை என்று நினைத்து அழுகை வந்தது,ஆனால் அழவில்லை ஒரு ஆணுக்காக அழுவதா என்று அழுகையை அடக்கிக்கொண்டேன்.
ஸ்ரீக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றியது,அதனால் என் தந்தை எனக்கு கொடுத்த கிரிஸ்டல்(crystal )அய்யப்பா கீசெயினை
(keychain )பவித்ராவிடம் கொடுத்து ஸ்ரீயிடம் கொடுக்குமாறு கூறினேன்,
அவளும் ஏதும் கேட்காமல் சரி என்று வாங்கிகொண்டாள்.

மறுநாள் பவித்ரா என்னிடம்"ரேணு,நீ குடுத்த கீசெயின ஸ்ரீ அண்ணா கிட்ட நீ குடுத்ததா சொல்லி குடுத்துட்ட"என்றால்.
"நா குடுத்ததா சொன்னியா!?"என்று கேட்டேன்.
"ஹா,நா கீசெயின குடுத்தது எதுக்குன்னு கேட்டாரு,அதனால நீ குடுத்ததா சொன்ன,வாங்கிக்கிட்டாரு!"என்று கூறி எதையோ யோசித்தபடி"பொதுவா ஸ்ரீ அண்ணா தெருஞ்சவங்க யாராவது எதுனா குடுத்தாலே வாங்க மாட்டாரு,ஆனா நீ கொடுத்தனு சொன்னதோ வாங்கிக்கிட்டாரு!,அதே சமையோ உன்கிட்ட தேங்க்ஸ் கூட சொல்ல சொல்லி சொல்லலா,உன்ன பத்தி எதுவுமே கேட்கல!".
"ஆமா..,நிஜமாவே நீ ஸ்ரீ அண்ணாவ ஒரு முறதா பார்த்து இருக்கியா"என்று என்னை பார்த்து சந்தேகத்துடன் கேட்டால்.
"ம்ம்..,ஒரு முறையாவது பாத்துட முடியாதானுதா தினமு பாக்குற"என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றேன்.

எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்பிற்க்கு அரசு பெண்கள் நடுநிலை பள்ளியில் சேர்ந்தேன்,பள்ளி தொடங்கிய அன்று பானுவை சந்தித்தேன்.
ஒரு வருடத்திற்கு பிறகு நான் பானுவை காண்கிறேன் ஆனால் ஏனோ இருவராலும் முன்பை போல நெருக்கமாக பேசிக்கொள்ள முடியவில்லை,பானு என்னிடம் ஸ்ரீயை பற்றி ஏதும் பேசவில்லை,நானும் எது கேட்கவில்லை,எங்கள் இருவருக்கும் மீண்டும் வெவ்வேறு பிரிவுகள் கிடைத்தது.
ஒரு நாள் காலை நானும்,நிஷாவும் பேசிக்கொண்டே வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்,அப்போது வழியில் பானு கிடைத்தால்
"ஹே ரேணு!"என்றால்.
நான் புன்னகித்து விட்டு"எப்படி இருக்க பானு"என்று கேட்டேன்.
"நல்லா இருக்க,நீ?"என்று கேட்டால்.
" நல்லா இருக்க"என்றேன்.
பிறகு வேறென்ன பேசுவது என்று தெரியாது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகித்துக்கொண்டோம்,"சரி பாக்கலா"என்று கூறி செல்ல இருந்தேன்.
"ஹே ரேணு"என்று அழைத்தால்.
"ஹா சொல்லு பானு"என்றேன்.
"உனக்கு ஸ்ரீ அண்ணாவ நியாபகம் இருக்கா?"என்று கேட்டால்.
"ம்..,"என்று தலையை ஆட்டினேன்.
"அவரு இப்போ சேலம் ல இல்ல,வேற ஊருக்கு போய்ட்டாரு"என்று கூறினால்.
ஸ்ரீ ஊரை விட்டு சென்று விட்டான் என்பதை மறந்திருந்த எனக்கு,பானு கூறியதை கேட்டவுடன் ஆரிய காயத்தில் மிளகாயை வைத்து தேய்த்தது போல இருந்தது.
முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டிக்கொள்ளாமல்,எதார்த்தமாக "ஒ,எந்த ஊருல இருக்காரு?"என்று கேட்டேன்.
"ம்ம்...,மதுரையோ,பாண்டிச்சேரியோ ஏதோ சொன்னாரு சரியா நியாபகம் இல்ல"என்றால்.
அமைதியாக சில நொடிகள் இருந்து விட்டு அவளை பார்த்து புன்னகித்தபடி "சரி வர"என்று கூறி ஸ்ரீயை யோசித்தபடி என் வகுப்பிற்கு வெளியே அமர்தேன்.
"ஒரு வேல..,நீ இவ்வளவு வருத்தப்படுவனு தெருஞ்சிருந்தா அந்த பைய்ய உன் கிட்ட சொல்லிட்டு போய் இருப்பானோ என்னமோ"என்றால்.
"அதெல்லா ஒன்னு இல்ல"என்றேன்.
பொய் கூறாதே என்பது போல என்னை பார்த்து புன்னகித்தால்..
நிஷா என் உயிர் தோழி ஆவாள்,அவள் நினைத்திருந்தால் ஸ்ரீ யார் என்று என்னிடம் கேட்டிருக்கலாம் ஆனால் அவள் என்னிடம் ஏதும் கேட்கவில்லை.
ஒரு வேலை கேட்டால் நான் வருத்த பாடுவேன் என்று நினைத்தாளோ என்னமோ,கடவுள் எனக்கு நல்ல நண்பர்களையும்,பெற்றோரையும் கொடுத்திருப்பதை நினைத்து மகிழ்தேன்.
ஆனால் ஸ்ரீ!,ஸ்ரீக்கு சிறிதேனும் நம் மீது அன்பு இருந்திருந்தாலோ அல்லது நம்முடைய நினைவு இருந்திருந்தாலோ ஊரை விட்டு செல்லும் போதாவது பானுவிடம் என்னை விசாரித்ததாக கூற கூறி சொல்லி இருப்பான் அல்லவா!?,நாம் தான் அவனை நினைத்து கொண்டிருக்கிறோம்,இனி ஸ்ரீ நம் வாழ்க்கையில் வர போவது இல்லை என்று நினைத்தேன்.

அதன் பிறகு 10ஆம் வகுப்பு,11ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு என மூன்று வருடங்கள் வெறும் படிப்பு படிப்பு என்று சென்றது,அந்த மூன்று வருடங்கள் சென்றதே தெரியவில்லை,ஸ்ரீயை முழுதாய் மறந்து போன காலங்கள் என்று கூட சொல்லலாம்,எப்போதாவது ஸ்ரீயின் நியாபகம் வந்தாலும் அது முன்பை போல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஒரு நாள் என் தந்தையுடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் என் தந்தை என்னிடம்"ரேணுமா உங்க பழைய ஸ்கூல் பிரின்சிபால்(principal )என்ன பாக்கனோனு சொன்னாரு,அவர பாத்துட்டு வீட்டுக்கு போலாமா"என்று கேட்டார்.
"ஹா சரி பா "என்றேன்.
பிறகு இருவரும் அரசு நடுநிலை பள்ளிக்கு சென்றோம்.
பிரின்சிபால் எங்களை கண்டவுடன் புன்னகையுடன் வரவேற்றார்.
"வாங்க வாங்க சார்,உட்காருங்க,எப்படி இருக்கீங்க?" என்றார் பிரின்சிபால்.
என் தந்தை,நன்றாக இருக்கிறேன் என்று கூறியபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்,நான் நின்றிருந்தேன்.
"நான் நிற்பதை கண்டா பிரின்சிபால் "உட்காருமா பாப்பா"என்றார்.
"ஹா சார்'என்று அமர்தேன்.
"உங்க பொண்ணா சார் "என்று கேட்டார்.
"ஆமா சார்,உங்க ஸ்கூல் பொண்ணுதா,உங்க ஸ்கூல்லதா படுச்சா"என்றார் என் தந்தை.
"ஓ,அப்படியா!,இப்ப என்ன படிகிரிங்க"என்று குழந்தையிடம் கேட்பது போல என்னை பார்த்து கேட்டார் பிரின்சிபால்.
"12th ஆச்சு சார்,காலேஜ் பாத்துட்டு இருக்கோ"என்றேன்.
"என்ன மார்க்கு"என்று ஆர்வமாக கேட்டார்.
"890 சார்"என்றேன்.
"அப்ப இன்ஜினீயரிங் சிட்டு கிடைக்குறது கொஞ்சோ கஸ்டோதா"என்று இழுத்தார்.
"இல்ல சார்,நா இன்ஜினீயரிங் படிக்குறதா இல்ல,ஏற்கனவே எங்க பார்த்தாலு எல்லாரு இன்ஜினியரிங் தா பன்றாங்க,அதுல நானு ஒருத்தி ஆகா விரும்புல"என்றேன்.
"அது என்னமோ சரிதா,எங்க வீட்டையே ரெண்டு இன்ஜினீயர் இருக்காங்க"என்றார்.
பிறகு என் தந்தையும்,ப்ரின்சிபாலும் பேச ஆரம்பித்தனர்.
"அப்ரோ சார் மேனேஜர் ஆய்டிங்கனு கேள்வி பட்ட,வாழ்த்துக்கள் என்று வாழ்த்தினார்"பிரின்சிபால்.
என் தந்தையும் புன்னகித்து கொண்டே அவர் வாழ்த்தை ஏற்றார்.
"அப்ரோ சார்,என்னோட பாலிசி ரெண்டு மெச்சூர் ஆகி இருக்கு அது பத்தி கொஞ்சோ பேசனு,அப்பரோ எ தம்பி அக்சிடென்ட்(accident ) பாலிசி ஒன்னு கட்டிட்டு இருந்தாரு போன மசோதா இறந்தாரு,அந்த பனோ வராதுன்னு சொல்ராங்க,அது சம்பந்தமா கொஞ்சோ சந்தேகோ கேட்கனு"என்று பேசிக்கொண்டிருந்தனர்.
எனக்கு அங்கு இருக்க விருப்பமில்லை அதனால் நான் மெல்ல தயக்கத்துடன் "டாடி(daddy )"என்று அழைத்தேன்.
நான் அழைத்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு இருவரும் என்னை பார்த்தனர்.
"நா வெளிய இருக்கட்டுமா"என்று தயக்கத்துடன் கேட்டேன்.
"ம்.,போடா "என்றார் என் தந்தை.
"பவோ போரடிக்குது போல..,போ மா,அப்படியே நீ படுச்சா கிளாஸ் எல்லா சுத்தி பாரு போ "என்றார் பிரிசிபெல்.
வெளியே வந்து பார்த்தேன்,நான் படித்த பள்ளி,அப்போது இருந்தது போல அழகு மாறாமல் அப்படியே இருந்தது.
நான் படித்த வகுப்பறைகளை எல்லாம் சென்று பார்த்தேன்,பள்ளி முழுவதும் சுத்தி வந்தேன்,அழகான,இனிமையான,சோகமான பல தருணங்கள் நினைவுக்கு வந்தன,மீண்டும் பள்ளி வாழ்க்கையை அனுபவித்திட முடியாதா என்று ஏக்கமாய் இருந்தது,அதே சமையம் கல்லூரியில் படிக்க போகிறோம் என்ற உற்சாகமும் இருந்தது.
சரி எங்காவது உட்காரலாம் என்று நினைத்து பிரின்சிபால் அலுவலகத்திற்க்கு பக்கத்தில் உள்ள வகுப்பிற்கு வெளியே உள்ள படிக்கெட்டில் அமர்தேன்,அங்கிருந்து என்னுடைய ஆறாம் வகுப்பறை தெரிந்தது,அப்போது தான்,நான் ஸ்ரீயின் வகுப்பறைக்கு வெளியே ஸ்ரீ எப்போது உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.
ஸ்ரீயை சந்தித்ததில் இருந்து பிரிந்தது வரை அனைத்தும் நினைவிற்கு வந்தது.
அவன் இல்லை என்று நினைக்கையில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
ஆறு வருடங்களுக்கு முன் மனதில் ஏற்பட்ட காயத்திற்காக அன்று அழுது கொண்டிருந்தேன்.
அப்போது தான் தெரிந்தது,ஸ்ரீ ஊரை விட்டும்,என் வாழ்க்கையை விட்டும் சென்றிருந்தாலும் கூட இன்னும் என் மனதை விட்டு செல்லவில்லை என்பது.
ஸ்ரீயை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்த போது,என் தந்தையும் ப்ரின்சிபாலும் வந்தனர்,நான் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் என் தந்தை.
"எ மா என்னை ஆச்சு,எ அழகுற!"என்று பதறி கேட்டார் என் தந்தை.
"என்ன மா,என்ன!"என்று பிரின்சிபால் வேறு குழப்பத்தோடு பதறி கேட்டார்.
"ரொம்ப வலிக்குது பா"என்று கூறி அழுதேன்.
"என்ன வலிக்குது,வலுச்சா சொல்லனு அதவிட்டுட்டு உட்கார்ந்து அழுதுட்டு இருந்தா?எங்க வலிக்குது"என்று கோபதுடனும்,பதட்டத்துடனும் கேட்டார்.
என் கையை என் இதயத்தின் மீது வைத்து,"இங்க வலிக்குது"என்று கூறி அழுதேன்.
நான் கூறியதை கேட்ட என் தந்தை ஏதும் பேசாமல் எதையோ யோசித்தபடி கவலையுடன் என்னை பார்த்தார்.
"இப்ப இருக்க பிள்ளைகளாலா என்னனு சொல்றது சார்,இந்த வயசுலயே நெஞ்சு வலினா எப்படி?,நல்லா சத்தா சாப்டாதான"என்று என் நிலை புரியாது பேசிக்கொண்டிருந்தார் பிரிசிப்பல்.
"ஆச்சு சார் நாங்க கிளம்புறோ"என்றார் என் தந்தை.
"ஹா சார்,முதல பாப்பாவ பாருங்க,ஹோச்பிடலுக்கு(hospital )கூட்டிட்டு போங்க"என்றார்.
என் தந்தை என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்,வீட்டிற்கு வந்த பிறகும் நான் அழுவதை நிறுத்தவில்லை.நான் தொடர்ந்து அழுவதை கண்ட என் தந்தை
என்னை கூட்டிக்கொண்டு வீட்டின் மாடிக்கு வந்தார்,பிறகு எதற்காக அழுகிறேன் என்று கேட்டார்.
ஏதும் கூறாமல் அழுது கொண்டிருந்தேன்.
"நீ நெஞ்சு வலியால அழுகலன்னு எனக்கு தெரியு மா,எதையோ நெனச்சு நெனச்சு அழுதுட்டு இருக்க,என்னனு சொன்னதான ஏதாவது செய்ய முடியு" என்றார்.
அழுதபடி அமைதியாக நின்றிருந்தேன்.
"அடுச்சனா பாரு!,என்ன பார்த்த பைத்திய காரமாரி தெரியுதா என்ன,எதுக்கு அழுகுறனு கேட்டா பதில் சொல்லாம அழுதுகிட்டே இருக்க"என்று கோவமாக பேசினார்.
திடீர் என என் தந்தை கோவமாக கத்தி பேசியதை கேட்டு பயத்தில் இதையம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது,இன்னும் அதிகமாக அழத்தொடங்கினேன்.
தலையில் கையை வைத்தபடி தவிப்போடு என்னை பார்த்தார்,பிறகு என்னை அவர் நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.
"நீ அழுகுறத என்னால பாக்க முடில மா!,உனக்கு இப்ப தெரியாது,நாளைக்கு உன்னோட குழந்த இந்த மாரி அழுதா அப்ப தெரியு,சரி விடு அழுகாத சொல்ல கூடாதுனு முடிவு பண்ணிட்ட இதுக்கு மேல கேட்டு ப்ரயோஜனோ இல்ல"என்றார்.
என் தந்தையிடம் அனைத்தையும் கூற வேண்டு என்று தோன்றியது,"அப்பா எனக்கு ஸ்ரீ வேணு,எனக்கு அவன பக்கனோனு"என்று கூற நினைத்தேன்.
என் தந்தையை பார்த்து"அப்பா நா...,எனக்கு....,என்னால,"என்று கூற முயற்சித்தேன் ஆனால் என்னால் முடியவில்லை.
எனக்கு ஸ்ரீ வேண்டும் என்று கூறி அழுதால் என்னை சரியாக வளர்க்க வில்லையோ என்று நினைத்து என் தந்தை வருந்துவாரோ என்று நினைத்து கூற முடியாது கதறி அழுதேன்.
"வேண்டா மா,உன்னால சொல்ல முடிலனா சொல்ல வேண்டா,அழுகாத,உன்னக்கு எப்போ முடியுமோ அப்ப சொல்லு,அப்பா கண்டிப்பா உன்ன புருஞ்சுப,உனக்கு ஒன்னு தெரியுமா இந்த உலகத்துலையே எனக்கு ரொம்ப பிடுச்ச பொண்ணு யார் தெரியுமா?"என்று கேட்டார்.
என் கண்களை துடைத்துக்கொண்டே "அப்பாயி"என்றேன்.
அவர் புனைகித்து விட்டு "இல்ல டா,நீதா,நீ தா முதல,உனக்கு அடுத்து தா எங்க அம்மா,உங்க அம்மா லா,உனக்காக எப்பவோ நா இருப்ப"என்று கூறி என் கண்களை துடைத்து என்னை அனைத்து கொண்டார்.

அதன் பிறகு திருச்சியில் உள்ள என் தாத்தா,பாட்டி வீட்டில் தங்கி படிக்க என் பெற்றோர் இடம் அனுமதி பெற்று நஷனல் காலேஜில் (national college )BBM சேர்ந்தேன்.

தொடரும்....

எழுதியவர் : அனுரஞ்சனி (25-Aug-19, 2:00 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 113

மேலே