எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினம் காலையில் எழுப்புவது என்பது ஒரு பெரிய போராட்டம்.......

தினம் காலையில் எழுப்புவது என்பது ஒரு பெரிய போராட்டம்.... 7:30 ஆரம்பித்து 8:00 மணிக்கு முடியும்

நேற்று இரவு தூங்கும் முன் பேத்தி(7 வயது) என்னைக் கேட்டாள்   'காலையில் நீ எத்தன மணிக்கு எழுந்துப்ப தாத்தா' என்று..  சொல்லவும்,

'என்னையும் எழுப்பு' என்று கட்டளையிட்டாள்..

ஒருமுறை இவ்வாறு எழுப்பாததால் மிகவும் கோபித்து அழுததால், மறக்காமல் எழுப்பினேன்...

பல் தேய்த்து, கான்வாஸ் மாட்டிக் கொண்டு, கீழே போய் ஐந்து ரவுண்டு சுற்றிவிட்டு, மேலே வந்து, ஐந்து நிமிடம்  ஸ்கிப்பிங் சுற்றிவிட்டு.. சோபாவில் சாய்ந்தாள்..

மெல்ல அருகில் சென்று நாளையும் எழுப்ப வேண்டுமா என்று கேட்க...

ஹூ ஹூம்... என்ற பதில்...

குழந்தைகளும் புது வருட சபதங்கள் எடுக்கிறார்களோ..?

---- முரளி

//மீள்//

பதிவு : முரளி
நாள் : 10-Jan-20, 12:19 pm

மேலே