சமூகத்தின் பொது வாய்

=========================
ஊடகங்கள் தேசத்தின் பொதுவாய்.
= உண்மையை பேசக்கூடாது மெதுவாய்
நாடகங்கள் நடத்துவோர்க் கேதுவாய்
=நடந்துகொள கூடாதுவிலை மாதுவாய்
ஆடவைக்கும் ஆட்சிக்குத் தோதுவாய்
=அடங்கிவிடக் கூடாதுவெறும் சாதுவாய்
ஏடறியா பாமரரின் தூதுவாய்
=எப்பொழுதும் திறக்கணுமதன் தர்மவாய்
.
புதுமைகளை சமைக்கின்ற கருவாய்
=புரட்சிக்கு வித்து திர்க்கும் தருவாய்
எதுவரினும் பயங்கொள்ளா உருவாய்
=இச்சமூக வேர்களுக்கு எருவாய்
மதுகுடித்து அழியுமூர் திருவாய்
=மாற்றத்தைக் காண்பதற்கு நுழைவாய்
இதுவென்று வழிகாட்டி விடும்வாய்
=என்றிருக்கணு மல்லவாவதன் கண்வாய்
.
பெண்பிள்ளை அடைந்துவிடும் ருதுவாய் .
=பெரும்பயத்தில் இருந்திடாமல் மறைவாய்
கண்முன்னே நடப்பவற்றைத் துணிவாய்
=கண்டறிந்து மக்களுக்குத் தெளிவாய்
கொண்டுசென்று சேர்ப்பதிலே விரிவாய்
=கோயில்தெய்வம் பக்தனுக்கருள் புரிவாய்
தொண்டாற்ற வேண்டுமிங்கு வெகுவாய்
=தூக்கிடணும் ஏற்றத்தாழ்வின் கொடுவாய்!
.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Aug-17, 3:59 pm)
பார்வை : 167

மேலே