பணக்கொடுமை

பணம் பணம் பணம்...
ஒவ்வொரு வீட்டிற்கும் தேவைப்படுகிறது பணம் காய்க்கும் மரம்...
மனம் பார்த்து வந்த காதல் இப்போதெல்லாம் பார்த்து வருவது பிணம்...
இல்லையென்றால் நம்மை நோக்கி பாயும் சொல் பிணம் பிணம் பிணம்...
போதுமென்ற மனதோடு அன்பாக வாழும் கணவன், மனைவி யாரு?
நீ கொஞ்சம் கூறு?
அங்கு மகிழ்ச்சி பூத்துக் குலுங்க வேண்டுமோர் பணம் காய்க்கும் மரம்...
வேலைக்குச் சென்று வந்த நல்ல கணவனை நோக்கி உன்னைக் கட்டிக் கொண்ட பிறகு ஒரு நல்ல சேலை உண்டா? என்று சாடை பேச,
வேலைக்குச் சென்று வந்த மனைவியிடம் ஊதாரிக் கணவன் குடிப்பதற்குக் காசு கேட்க, மறுத்தால் உதைக்க,
பிள்ளைகள் படிப்பில் ஆடையில் தொடங்கி கட்டையில் வேகும் வரை இந்த பாழும் உலகில் பணமின்றி ஏதுமில்லையடா...
பெண் கொடுமை, வன்கொடுமை, ஆண் கொடுமை என்று பல கொடுமைகளிருப்பினும் இந்த உலகில் எங்கும் உலா வருவது இந்தப் பணக் கொடுமை...
அதே ஆடம்பரக் கொடுமை...