இறைவன்
உனக்காகவே எப்போதும்
உன்னுள்ளே கிடப்பவன்
அவன்தான் கடவுள் -அவனை
எண்ணிப் பார்க்க உனக்கு
சமயம் கிடைப்பதில்லை !
தீமைகள் உன்னை நாடி
வரும்போது மட்டும்
அப்பனே என்னை காப்பாற்றுவாயா
என்று கூறி அழுகிறாய்
நன்மைகள் அள்ளி அள்ளி தருபவன் அவன்
அதில் இன்பமாய் வாழ்ந்திடும் போது
'அவனை'எண்ணிப் பார்க்க கூட
உனக்கு சமயம் கிடைப்பதில்லை!
உன் உள்ளே உள்ளத்தின் உள்ளே
உனக்காக அவன் காத்திருக்க
அவனைத் தேடி எங்கெங்கோ
ஓடி அலைகிறாய் அவன் இருப்பதை மறந்து
உள்ளத்தில் உறைவோனை நீ
உணர்ந்திடுவாய் ஆகில்
உனக்கு வாழ்வில் துக்கம் என்பது
ஏதும் இல்லையே -ஏனெனில்
அப்போது உன் கண்ணில்
தோன்றுவது சுக துக்கங்கள் அல்ல
'அவன்' வடிவு மட்டும்தான்
அதுவே நாம் காணும்
இறை நாடல் 'இறை ஐக்கியம்'