எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவு மீட்டல் ஒரு வருடத்திற்கு முன்பு, இதே தேதியில்...

நினைவு மீட்டல்
ஒரு வருடத்திற்கு முன்பு, 
இதே தேதியில் ’எழுத்து’ தளத்தில் நானெழுதிய கவிதை. 


  புறக்கணிப்பு விடுதி
 புறக்கணிப்பு விடுதி - சந்தோஷ்
நிறமற்ற கோப்பையொன்றில்
சிவப்புநிறத் திரவம்
ஊற்றப்பட்டிருந்தது.
(ரெட் ஒயின் எனவும்
பெயரிட்டுக்கொள்ளவும் )
அதிலென் தனிமையினை
நனைத்துக்கொண்டிருந்தப்போது
ரவிவர்மன் ஒவியத்திலுள்ள
அந்தப் பேரழகி
என் பின்னங்கழுத்தினை
இறுக இறுகப்பிடித்து
அவளின் மார்பகபிரதேசத்தில்
ஒடவிட்டுக்கொண்டிருந்தாள்.

இருவிதமான போதைகளுக்கு
மத்தியில்
தெளிவில்லாமல்
தெளிவாகி ஓடியதெனது
ஆசைப்புரவியினை
நடுநிசி நாய்கள்
வழ் வள் என குரைத்து
திசைத்திருப்பிவிட
ஓவிய பேரழகி மீண்டும்
சுவற்றுப்படமாகி
ஏமாற்றிவிட்டாள்.
.
எரிச்சல் மேலோங்கி
என் ஆழ்மனப் பேராசைகள்
குமுறிய பேரலையென
ஆவேச சிகரெட் ஒன்றினை எரித்து
தானாகவே அமைதியாக அணைந்தது.

வடகிழக்குத் தென்றலொன்று
என் தனிமைச் சாளரத்தை
முட்டி மோதி
தட்டிக் கத்தியது.

அட......என்ன இது மாயை?
இந்த நினைவுப் பேய்களின்
தொந்தரவு தாளமுடியவில்லையென
மீண்டுமொரு
நிறமற்ற கோப்பையில்
நிறமுள்ள மதுவை
ஊற்றி நிரப்பி
இதழில் கவ்வி கவ்வி
இரவை போதையாக்கி
விடியலில் தெளிவுற்றப்போதுதான்
எனக்குத் தெளிந்தது
நேற்று....
நான் யாருமற்ற
புறக்கணிப்பு விடுதியில்
தனிமைத்தனலில்
ஏக்கத்தின் கோப்பைக்குள்
சாம்பலாகினேன் என.......!


**

-இரா.சந்தோஷ் குமார்  

நாள் : 8-Jul-16, 7:45 am

மேலே