வறுமை என்பவன் என் உயிருக்கு உயிரான நண்பன்,; என்...
வறுமை என்பவன் என் உயிருக்கு உயிரான நண்பன்,;
என் கடைசி காலம் வரை என்னை விட்டு பிரிய மனமில்லாமல் என் கூடவே இருந்தது இன்னும் வாழ்கிறான் என்னோடு ;
நண்பன் என்றால் நண்பன் அவனல்லவா நண்பன் ;
இது போன்ற நண்பனை நான் என் வாழ்நாளில் கண்டதே இல்லை;
அவன் என்னை விட்டு ஒரு நாளும் பிரிந்திருந்ததில்லை;
நானும் அவனை விட்டு ஒரு நாளும் பிரிய முடியவில்லை ;
நான் காலம் கடக்க நேர்ந்தால் அவன் யாரை நணுபனாக ஏற்பானோ என்று ஒரே கவலையாக இருக்கிறது;
ஏனென்றால் அவனுக்கோ மரணமே கிடையாது;
நான் மரணிக்காமல் இருந்தால் அடுத்தவன் தப்பிப்பான்;
நான் மரணித்து விட்டால் அடுத்தவன் அகப்பட்டு விடுவான்;
அதை நினைக்கும் போது வருத்தமாய் இருக்கிறது; எனில் நான் மரணிக்காமல் இருக்கவிடு இறைவா; உம்மை வேண்டி கேட்கிறேன் அருள்வாயாக.