தாம்பரம் கடற்கரை ஊர்கோலம்

தாம்பரத்தில் தாம்பூலம் வாங்கி, தாமதமாக ஈஎம்யூ ஏறினேன்
சானடோரியத்தில் சாணை பிடித்து காரியத்தில் இறங்கினேன்
குரோம்பேட்டில் குள்ள குலோத்துங்கனை கண்டு குளிர்ந்தேன்
பல்லாவரத்தில் பல் இளிக்கும் பல்லில்லாதவளை கண்டேன்
திருசூலத்தில் திருதிருவென திரிந்து தெரியாம திரும்பினேன்
மீனம்பாக்கத்தில் மீனாவிடம் மீசையை மெல்ல முறுகினேன்
பழவந்தாங்கல் பழக்கடையில் பழுத்த பழங்கள் முழுங்கினேன்
பரங்கிமலையில், பறிக்காத பரங்கிகாயை பிடித்துப்போட்டேன்
கிண்டியில், வண்டில சுண்டல் கிண்டியவரை கிண்டலடித்தேன்
சைதாப்பேட்டைல சைட்ல சைட்அடித்தவளை சைட் பண்ணேன்
மாம்பலத்தில் இம்மாம்பெரிய மாம்பழங்கள் பார்த்து மகிழ்ந்தேன்
கோடம்பாக்கம் கோடியில் கோவை ஒன்றை கோட்டை விட்டேன்
நுங்கம்பாக்கத்தில் நுழைந்து நுங்கை ருசித்து நூறு வாங்கினேன்
சேத்துப்பட்டில் சேத்துவச்ச சேத்தில் சிக்கி, சேறாகி சீரழிந்தேன்
எக்மோரில் எக்கச்சக்கமா எலுமிச்சை ரசம், மோரும் குடித்தேன்
பார்க் பார்கிங்கில் பக்கத்துக்காரன் பைக்கை ஸ்டார்ட் பண்ணேன்
போர்ட் வந்தது போர்ட்டர் இல்லை தந்தி ரிப்போர்ட்டர் இருந்தார்
பீச்சு வந்தது மூச்சு முட்டி, காத்து வாங்க பீச்சுக்கு போய்ட்டேன்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jul-22, 8:37 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 106

மேலே