சரியான தலைவலி
ஒரு நோயாளி டாக்டரிடம் வருகிறார்.
நோயாளி: டாக்டர், நீங்க கொடுத்த மருந்தினை சாப்பிட்டதனால், விபரீதமான சைடு எபெக்ட் இருக்குது.
டாக்டர்: சொல்லுங்க , என்ன சைடு எபக்ட்ன்னு தெரிஞ்சிக்கலாம்.
நோயாளி: போனமுறை கடுமையான ஒற்றைத்தலைவலி என்று உங்களிடம் வந்தேன். நீங்களும் மருந்துகள் எழுதிக்கொடுத்தீர்கள். நானும் உங்களுக்கு கன்சல்டஷன் பணம் 500 ரூபாய் கொடுத்தேன். நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கினேன்.
டாக்டர்: சரி , புரியுது, இப்போ என் உயிரை வாங்காதீங்க, விஷயத்துக்கு வாங்க.
நோயாளி: டாக்டர், இப்போ ஒத்த தலைவலி போய், ரெட்டை தலைவலி வந்துவிட்டது.
டாக்டர்: ஒத்த தலைவலி, ரெட்டை தலைவலி இரண்டில், எது பரவாயில்லை?
நோயாளி: ஓத்த தலைவலிக்கு, ரெட்டை தலைவலி ரொம்ப மேல் தான்
டாக்டர்: அப்புறம் என்ன, நான் எழுதி தந்த மருந்து பாசிட்டிவ் சைடு எபெக்ட் தான் கொடுக்கிறது. அதனால், இதே மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுங்க.
நோயாளி: ???