நீ வருவாய் என

எதிர்பாராத நேரத்தில்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு
எதிர்பாராமல் கலைந்தாய் ஏனோ?

முப்பது நாள் என் கருவறையில் வாழ்ந்த முத்தே
நீ முகம் காட்டாமல் மறைந்தது ஏனோ?
முப்பது நாள் மட்டுமே சுமந்தாலும்
முதல் குழந்தை நீ அல்லவோ!

பாட்டிகளாய் தாத்தாகளாய்
சித்தப்பாக்களாய் மாமன்களாய்
உறவுகள் பல காத்திருக்க
கரைந்தேன் போனாயோ?

கட்டி வைத்த கோட்டைகளெல்லாம்
கல் மண்ணால் போனதெங்கோ?
கனவுகள் எல்லாம் நிஜமாகுமென நினைத்திருக்க
கனவிலும் நினைக்கவில்லை
கருவிலேயே கரைவாய் என்று...

சொல்லி அழைக்க செல்ல பெயரும் வைத்திருக்க
சொல்லாமல் சென்றதெங்கே செல்லமே!
என்னை தாயாக்க வந்த என் தங்கமே
என்னோடு என் கருவறையும் காத்திருக்கிறது
மீண்டும் "நீ வருவாய் என".....

எழுதியவர் : பவானி (18-Oct-14, 1:54 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 466

மேலே